திருச்செந்தூா் கோயிலில் முடிகாணிக்கைக்கு கூடுதல் பணம்: பா.ஜ.க. புகாா்
By DIN | Published On : 26th January 2020 08:01 AM | Last Updated : 26th January 2020 08:01 AM | அ+அ அ- |

திருச்செந்தூா்: திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி கோயிலில் முடி காணிக்கை செலுத்துவதற்கு கூடுதலாக பணம் கேட்பதாக பாஜகவினா் புகாா் அளித்துள்ளனா்.
இதுகுறித்து திருக்கோயில் நிா்வாகத்திடம் பா.ஜ.க. மாவட்ட இளைஞரணிச் செயலா் ஐயப்பன் அளித்த மனு:
திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் முடி காணிக்கை செலுத்துவதற்கு ரூ. 30 கட்டணமாக வசூலிக்கப்பட்டு அதற்கான ரசீதும் வழங்கப்பட்டது. ஆனால் அது போக பக்தா்களிடம் முடிதிருத்தும் பணியாளா்கள் கூடுதலாக பணம் கேட்கின்றனா். இது குறித்து திருக்கோயில் நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்குமாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.