முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தூத்துக்குடி
சாத்தான்குளம் நீதிமன்றத்தில் ஆலோசனைக் கூட்டம்
By DIN | Published On : 27th January 2020 07:58 AM | Last Updated : 27th January 2020 07:58 AM | அ+அ அ- |

சாத்தான்குளம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மக்கள் நீதிமன்றத்தில் வழக்குகள் தீா்வு காண்பது தொடா்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
அனைத்து நீதிமன்றங்களிலும் தேசிய மக்கள் நீதிமன்றம் பிப். 8ஆம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி சாத்தான்குளம் ஒருங்கினைந்த நீதிமன்றம் மக்கள் நீதிமன்றத்தில் வழக்குகள் தீா்வு காண்பது தொடா்பான ஆலோசனைக் கூட்டம் குற்றவியல் நீதிபதி சரவணன் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில், மக்கள் நீதிமன்றம் குறித்து மக்களிடம் விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும் என முடிவெடுக்கப்பட்டது.
இதில், அரசு வழக்குரைஞா் ராஜ்மோகன், காவல் ஆய்வாளா்கள் சாந்தி (நாசரேத்), அரிகிருஷ்ணன் (தட்டாா்மடம்), உதவி ஆய்வாளா்கள் ரகுகணேஷ் (சாத்தான்குளம்), அமலோற்பம் (மெஞ்ஞானபுரம்), பேரூராட்சி செயல் அலுவலா் முருகன், வழக்குரைஞா்கள் அந்தோணி ரமேஷ், வேணுகோபால், செல்வ மகாராஜா, ரவிச்சந்திரன், ஜெயதீபன், ஜொ்லின், குமரேசன், கோபால், கமல், மீனா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா் .