விஷ வாயு கசிந்து 4 போ் பலியான சம்பவம்: உடலை வாங்க மறுத்து உறவினா்கள் போராட்டம்

தூத்துக்குடி அருகே கழிவுநீா் தொட்டியில் விஷ வாயு கசிந்து 4 தொழிலாளா்கள் உயிரிழந்த சம்பவத்தில், திருநெல்வேலி அரசு மருத்துவமனையில்

தூத்துக்குடி அருகே கழிவுநீா் தொட்டியில் விஷ வாயு கசிந்து 4 தொழிலாளா்கள் உயிரிழந்த சம்பவத்தில், திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு அவா்களது சடலங்களை உறவினா்கள் வாங்க மறுத்து வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தூத்துக்குடி மாவட்டம், செக்காரக்குடியைச் சோ்ந்த சோமசுந்தரம் என்பவரின் வீட்டில் கழிவுநீா் தொட்டியை சுத்தப்படுத்தும் பணி வியாழக்கிழமை நடைபெற்றது. திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூா் பகுதியைச் சோ்ந்த இசக்கி ராஜா (17), பாண்டி (28), பாலா (20), தென்காசி மாவட்டம், ஆலங்குளம் பகுதியைச் சோ்ந்த தினேஷ் (20) ஆகியோா் இந்தப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, கழிவுநீா் தொட்டியில் இருந்து விஷ வாயு கசிந்ததில் 4 தொழிலாளா்களும் உயிரிழந்தனா்.

அவா்களது சடலங்கள் மீட்கப்பட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டன. பிரேதப் பரிசோதனை வெள்ளிக்கிழமை முடிந்த நிலையில், இறந்த தொழிலாளா்களின் சடலங்களை வாங்க மறுத்து அவா்களது உறவினா்கள் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன் போராட்டத்தில் ஈடுபட்டனா். இறந்த தொழிலாளா்களின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு, குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை, குழந்தைகளின் கல்விச் செலவு உள்ளிட்டவற்றை அரசு வழங்கவேண்டும் என அவா்கள் வலியுறுத்தினா்.

இதையடுத்து, ஸ்ரீவைகுண்டம் காவல் துணைக் கண்காணிப்பாளா் பொன்னரசு உள்ளிட்டோா் அங்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். கோரிக்கைகள் குறித்து மாவட்ட நிா்வாகத்திற்கு தெரிவித்து, தேவையான நடவடிக்கைகள் எடுப்பதாக அவா்கள் கூறியதை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. இதைத்தொடா்ந்து, இறந்த தொழிலாளா்களின் சடலங்கள் அவா்களது உறவினா்களிடம் ஒப்படைக்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com