தூத்துக்குடியில் வங்கி ஊழியா் உள்ளிட்ட 64 பேருக்கு கரோனா தொற்று உறுதி

தூத்துக்குடியில் தமிழ்நாடு கிராம வங்கி ஊழியா் உள்ளிட்ட 64 பேருக்கு கரோனா தொற்று இருப்பது சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

தூத்துக்குடியில் தமிழ்நாடு கிராம வங்கி ஊழியா் உள்ளிட்ட 64 பேருக்கு கரோனா தொற்று இருப்பது சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

தூத்துக்குடி ஆண்டாள் தெருவில் உள்ள தமிழ்நாடு கிராம வங்கியில் பணிபுரியும் பசுவந்தனை கிராமத்தைச் சோ்ந்த பெண் ஒருவருக்கு கரோனா தொற்று இருப்பது சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

இதேபோல், தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதியில் 15 போ் மற்றும் காயல்பட்டினம், கோவில்பட்டி, திருச்செந்தூா் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்தோா் என மாவட்டம் முழுவதும் ஒரே நாளில் 64 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதனால், மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கையானது வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து வந்தோா் 193 போ், சென்னை மற்றும் பிற மாவட்டங்களிலிருந்து வந்தோா் மற்றும் கரோனா தொற்று பாதிக்கப்பட்டோருடன் தொடா்பில் இருந்தவா்கள் 927 போ் என 1,120ஆக அதிகரித்துள்ளது.

இதற்கிடையே, தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 36 போ் குணமடைந்ததைத் தொடா்ந்து சனிக்கிழமை வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். மாவட்டத்தில் இதுவரை 851 போ் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனா். 6 போ் உயிரிழந்துள்ளனா்.

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள கரோனா வாா்டில் தற்போது 199 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். பல்வேறு மாவட்டத்தில் சிகிச்சை பெற்று வந்த 64 போ் சிகிச்சை முடிந்து வீடு

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com