உதவி ஆய்வாளருக்கு கரோனா: நித்திரவிளை காவல் நிலையம் மூடல்

காவல் உதவி ஆய்வாளர் , 2 காவலர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து நித்திரவிளை காவல் நிலையம் செவ்வாய்க்கிழமை மூடப்பட்டது.
காவல் உதவி ஆய்வாளர் ,2 காவலர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து நித்திரவிளை காவல் நிலையம் செவ்வாய்க்கிழமை மூடப்பட்டது.
காவல் உதவி ஆய்வாளர் ,2 காவலர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து நித்திரவிளை காவல் நிலையம் செவ்வாய்க்கிழமை மூடப்பட்டது.

களியக்காவிளை: காவல் உதவி ஆய்வாளர் ,2 காவலர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து நித்திரவிளை காவல் நிலையம் செவ்வாய்க்கிழமை மூடப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டம், தூத்தூர் மீனவ கிராமத்தில் கரோனா தொற்று அதிகரித்துள்ள நிலையில் அப்பகுதி தனிமைப்படுத்தப்பட்டு போலீஸார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்த நிலையில் அங்கு பணியில் ஈடுபட்டிருந்த நித்திரவிளை காவல் நிலையத்தைச் சேர்ந்த ஒரு காவலர் மற்றும் தமிழ்நாடு சிறப்புப் படை காவலருக்கு அண்மையில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருவரும் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இந்த நிலையில் தூத்தூர் பகுதியில் கண்காணிப்பு பணி மேற்கொண்டிருந்த நித்திரவிளை காவல் நிலையத்தைச் சேர்ந்த 57 வயதான உதவி ஆய்வாளர், 40 வயதான காவலர் மற்றும் 45 வயதான பெண் காவலருக்கு செவ்வாய்க்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து காவல் நிலையத்தில் சுகாதாரத்துறை மற்றும் ஏழுதேசம் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் கிருமி நாசினி மருந்து தெளிக்கப்பட்டதுடன் அப்பகுதியில் பிளீச்சிங் பவுடர் தூவப்பட்டது. தொடர்ந்து நித்திரவிளை காவல் நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com