நாசரேத் ஆலய கோபுரத்தில் ஏறி சேகர ஊழியர் குடும்பத்தினர் தற்கொலை மிரட்டல்

நாசரேத்தில் பணியில் இருந்து நீக்கப்பட்ட சேகர ஊழியர், தனது மனைவி மற்றும் 2 மகன்ளுடன் பேராலய கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்து வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நாசரேத் ஆலய கோபுரத்தில் ஏறி சேகர ஊழியர் குடும்பத்தினர் தற்கொலை மிரட்டல்

நாசரேத்தில் பணியில் இருந்து நீக்கப்பட்ட சேகர ஊழியர், தனது மனைவி மற்றும் 2 மகன்ளுடன் பேராலய கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்து வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தூத்துக்குடி - நாசரேத் சிஎஸ்ஐ திருமண்டலத்தில் கீழ் பல்வேறு கல்லூரிகள், பள்ளிகள் மற்றும் தேவாலயங்கள் செயல்பட்டு வருகிறது. இங்கு சுமார் 100க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். திருமண்டலத்தின் கீழ் நாசரேத் தூய யோவான் பேராலயம் இயங்கி வருகிறது. இந்த பேராலய சேகர அலுவலகத்தில் அகஸ்டின் (40)என்பவர் கடந்த 17 ஆண்டுகளாக பணியாற்றி வந்தார்.

இந்நிலையில் அவர் தற்போது பாதிரியாரால் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதனால் மனம் உடைந்த அகஸ்டின், மற்றும் அவரது மனைவி கிறிஸ்டி (38), மற்றும் மகன்கள் ஜாண்(10), கேமர் (8) ஆகியோர் இன்று நாசரேத் பேராலய 180 அடி உயர கோபுரத்தின் மீது ஏறி குடும்பத்துடன் தற்கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது. 

இதனை தொடர்ந்து டி.எஸ்.பி. நாகராஜன், சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் சகாயசாந்தி தலைமையிலான காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு நிலைய அதிகாரி மாரியப்பன் ஆகியோர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com