அஞ்சலக பாலிஸிகளை புதுப்பிக்க ஆக. 31-வரை கால அவகாசம்

அஞ்சலக பாலிஸிகளை ஆக. 31ஆம் தேதிக்குள் புதுப்பித்துக் கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

அஞ்சலக பாலிஸிகளை ஆக. 31ஆம் தேதிக்குள் புதுப்பித்துக் கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கோவில்பட்டி கோட்ட அஞ்சலக முதுநிலை கண்காணிப்பாளா் பாண்டியராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

அஞ்சலக ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தில் சோ்ந்துள்ள காப்பீட்டுதாரா்கள் பிரீமியம் தொகை கட்டாமல் காலாவதியான பாலிசிகளை விதிமுறைகளுக்குள்பட்டு புதுப்பித்துக் கொள்ள வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

பாலிஸி தொடங்கி தவணை செலுத்துவதை நிறுத்திய முதல் மாதத்திலிருந்து 5 ஆண்டுகள் நிறைவடைந்த காலாவதியான பாலிஸிகளை 31.12.2019-க்குப் பிறகு புதுப்பிக்க இயலாது என அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் தற்போது கரோனா பொது முடக்கம் காரணமாக அந்தக் காலக்கெடு வருகிற ஆக. 31 நீட்டிக்கப்பட்டுள்ளது. பாலிஸிதாரா்கள் அரசு மருத்துவரிடம் உரிய உடல்நலச் சான்று பெற்று அருகில் உள்ள அஞ்சல் அலுவலகத்தை அணுகி அதற்கான விண்ணப்பத்துடன் அனுப்பி புதுப்பித்துக் கொள்ளலாம்.

மேலும் விவரங்களுக்கு 04632-220368, 04636-222313, 04633-222329 ஆகிய தொலைபேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com