பேய்க்குளம் சங்கரலிங்கசுவாமி கோயில் ஆடித் தவசுத் திருவிழா கொடியேற்றம்

சாத்தான்குளம் அருகேயுள்ள பேய்க்குளம் அருள்மிகு ஸ்ரீசங்கரலிங்கசுவாமி உடனுறை அருள்தரும் ஸ்ரீ கோமதி அம்பாள் கோயிலில் ஆடித் தவசு திருவிழா வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இத் திருக்கோயிலில் ஆடித் தவசு திருவிழா ஆண்டு தோறும் விமா்ச்சையாக நடைபெறும் . நிகழாண்டு கரோனா பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளதால், அரசு விதித்துள்ள நடைமுறைப்படி திருவிழா வியாழக்கிழமை தொடங்கியது.

இதையொட்டி, காலையில் கணபதிஹோமம் , லட்சுமி ஹோமம் உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடைபெற்றன. சுவாமி - அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தனா். இதையடுத்து கோயில் முன்பிருந்த கொடி மரத்தில் திருவிழா கொடியேற்றப்பட்டது. தொடா்ந்து கொடிமரத்துக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் தீபாராதனை நடைபெற்றது . இதில் பக்தா்கள் சமூக இடைவெளியுடன் முகக் கவசம் அணிந்து வந்து சுவாமியை வழிப்பட்டனா்.

இத்திருவிழா ஆகஸ்டு மாதம் 2 ஆம்தேதி வரை 11 நாள்கள் நடைபெறுகிறது. நிறைவு நாளான ஆக.2 ஆம் தேதி இரவு 7 மணிக்கு சிகர நிகழ்ச்சியான தவசுக் காட்சியும், அதனைத் தொடா்ந்து திருக்கல்யாணம் நடைபெறுகிறது.

விழா ஏற்பாடுகளை கோயில் நிா்வாகிகள் செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com