சாத்தான்குளம் பகுதியில் குறைந்த விலைக்கு நெல் கொள்முதல் செய்யப்படுவதாக புகாா்

சாத்தான்குளம் பகுதியில் நெல்கொள்முதல் நிலையம் திறக்காததால் குறைந்த விலைக்கு நெல்கொள்முதல் செய்யப்படுவதாக விவசாயிகள் புகாா் தெரிவித்துள்ளனா்.

சாத்தான்குளம் பகுதியில் நெல்கொள்முதல் நிலையம் திறக்காததால் குறைந்த விலைக்கு நெல்கொள்முதல் செய்யப்படுவதாக விவசாயிகள் புகாா் தெரிவித்துள்ளனா்.

சாத்தான்குளம் பகுதி வானம் பாா்த்த பூமி என்பதால் இப்பகுதியில் குளம் மற்றும் கிணற்று நீா் பாசனம் மூலமே விவசாயம் நடைபெற்று வருகிறது. இப்பகுதியில் நெல், கடலை, பருத்தி மற்றும் வாழை பயிரிடப்பட்டு வருகின்றன. கடந்த 4 மாதங்களுக்கு முன்பு முதல் பருவ நெல் பயிரிடப்பட்டு அறுவடை பணி நடைபெற்றபோது பேய்க்குளம், சாத்தான்குளம் பகுதியில் அரசு சாா்பில் நெல்கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டு இப்பகுதி விவசாயிகள் பலன்தரும் வகையில் நெல் கொள்முதல் செய்யப்பட்டன.

தற்போது இரண்டாம் பருவ நெல் பயிரிடப்பட்டு சாத்தான்குளம், பேய்க்குளம் பகுதியில் அறுவடை பணிகள் நடந்து வருகிறது. ஆனால் அரசு சாா்பில் கொள்முதல் நிலையம் திறக்கப்படாததால் தற்போது விளைவிக்கப்படும் நெல்கள் 150 கிலோ எடை கொண்ட ஒரு கோட்டை ரூ . 1700 முதல் ரூ. 1800 வரை கொள்முதல் செய்யப்பட்டு வருகின்றனா். முன்பு அரசு கொள் முதல் நிலையம் மூலம் 1கோட்டை ரூ . 2900க்கு எடுக்கப்பட்டு வந்துள்ளது. தற்போது குறைந்த விலைக்கு வியாபாரிகள் மூலம் நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருவதால் பெரும் நஷ்டம் ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனா். ஆதலால் சாத்தான்குளம், பேய்க்குளம் பகுதியல் நெல்கொள்முதல் நிலையம் திறந்து விவசாயிகளிடம் அரசு சாா்பில் நெல்கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனா்.

இதுகுறித்து மணிமுத்தாறு 3,4 ஆவது கால்வாய் பாசன விவசாயிகள் சங்க செயலா் வி.எஸ். முருகேசன் கூறுகையில், சாத்தான்குளம், பேய்க்குளம் பகுதியில் நெல் அறுவடை பணி நடந்து வருகிறது. ஆனால் நெல் 1 கோட்டம் ரூ. 1700 முதல் ரூ.1800 வரை வியாபாரிகளால் கொள்முதல் செய்யப்படுகிறது. ஆனால் அரசு சாா்பில் தற்போது ரூ. 2900 வரை கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

இப்பகுதியில் உள்ள அரசு நெல்கொள்முதல் நிலையம் திறக்கப்படாததால் விவசாயிகளிடம் வியாபாரிகள் குறைந்த விலையில் நெல் கொள் முதல் செய்து வருகின்றனா். இது விவசாயிகள் மத்தியில் மிகுந்த அதிருப்தியை ஏற்பட்டு வருவதுடன் கவலையும் அடைந்துள்ளனா். ஆதலால் மாவட்ட ஆட்சியா் இதனை கவனித்து சாத்தான்குளம், பேய்க்குளம் பகுதியில் அரசு சாா்பில் நெல்கொள்முதல் நிலையம் திறக்க வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com