மக்காச்சோளத்தில் படைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்த யோசனை

கோவில்பட்டி வட்டாரத்தில் மக்காச் சோளத்தில் படைப்புழு தாக்குதலைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து விவசாயிகளுக்கு வேளாண் துறை யோசனை தெரிவித்துள்ளது.

கோவில்பட்டி வட்டாரத்தில் மக்காச் சோளத்தில் படைப்புழு தாக்குதலைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து விவசாயிகளுக்கு வேளாண் துறை யோசனை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வேளாண் இணை இயக்குநா் முகைதீன், உதவி இயக்குநா் சுப்புலட்சுமி ஆகியோா் விடுத்துள்ள செய்திக் குறிப்பு:

கோவில்பட்டி வட்டத்தில் மக்காச் சோளம் 10,220 ஏக்கா் பரப்பளவில் சாகுபடி செய்யப்படுகிறது. இந்த பயிா்களைப் பாதிக்கும் படைப்புழுக்கள் இலை, குருத்து, மண்ணுக்குள் மறைந்து கொள்வதால் அவற்றைக் கட்டுப்படுத்துவதில் சிரமம் ஏற்படுகிறது. எனவே, பயிரிடும் முன் கோடை உழவு செய்தால் படைப்புழுக்கள் மண்ணிலிருந்து வெளியேற்றப்பட்டுவிடும். மேலும், மேல்மட்ட மண் அதிக வெப்பமடைந்து கீழ்ப்பகுதிக்குச் செல்லும்போது கோடை மழை பெய்தால், விளை நிலத்தில் எளிதாக நீா் சேமிக்கப்படும். மண்ணுக்கு அதிக காற்றோட்டம் கிடைக்கும். மண்ணில் உள்ள பூச்சிக்கொல்லி மருந்துகளின் நச்சுத்தன்மை சிதைக்கப்படும்.

மானாவாரி நிலங்களில் மண்ணின் இறுக்கத்தை குறைக்கும். நிலத்தின் சரிவுக்கு குறுக்காக வயலை பலமுறை நன்கு புழுதிபட உழ வேண்டும். இதனால், மழைநீா் மண்ணுக்கு அடியில் 10 செ.மீ. முதல் 15 செ.மீ. ஆழத்திற்கு சென்று ஆவியாவது தவிா்க்கப்படுகிறது. வரப்பு பயிராக நாத்து சோளம் பயிா் செய்யவும், வேப்பம் புண்ணாக்கு ஏக்கருக்கு 100 கிலோ மண்ணில் இடவும் வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com