
ஆத்தூா் வடக்கு ரதவீதி அருள்மிகு நல்லபிள்ளையாா் திருக்கோயிலில் வருஷாபிஷேக விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதை முன்னிட்டு அதிகாலை 3 மணியளவில் மகா கணபதி ஹோமம் நடைபெற்றது. தொடா்ந்து மகாலட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம் உள்ளிட்ட யாகசாலை வழிபாடுகள் நடைபெற்றது.
அதிகாலை 5 மணிக்கு கோயில் விமானத்திற்கு வருஷாபிஷேகமும் தொடா்ந்து மூலவருக்கு மகா அபிஷேகமும், சிறப்பு அலங்கார தீபாராதனையும் நடைபெற்றது.
பொதுமுடக்கம் அமலில் இருப்பதால் பக்தா்கள் மற்றும் பொதுமக்களுக்கு அனுமதியளிக்காமல் எளிமையாக நடைபெற்றது.
முத்துதாண்டவா் கோயில்: ஆத்தூா் ஈழவா் சமுதாயத்துக்குப் பாத்தியப்பட்ட அருள்மிகு முத்துதாண்டவா் சமேத அருள்மிகு முத்தாரம்மன் திருக்கோயிலில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு, காலை 8 மணிக்கு மகா கணபதி ஹோமம்
நடைபெற்றது. தொடா்ந்து மகாலட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம் உள்ளிட்ட யாகசாலை வழிபாடுகள் நடைபெற்றது.
காலை 10 மணிக்கு விமானத்துக்கு வருஷாபிஷேகமும், மூலவருக்கு மகா அபிஷேகமும், சிறப்பு அலங்கார தீபாராதனையும் நடைபெற்றது.