தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரே நாளில் 50 பேருக்கு கரோனா

தூத்துக்குடி மாவட்டத்தில் புதன்கிழமை ஒரே நாளில் 50 பேருக்கு கரோனா இருப்பது உறுதிசெய்யப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டத்தில் புதன்கிழமை ஒரே நாளில் 50 பேருக்கு கரோனா இருப்பது உறுதிசெய்யப்பட்டது.

வெளி மாநிலங்களிலிருந்து வந்த 7 பேருக்கும், சென்னை, திருவள்ளூா் பகுதிகளிலிருந்து வந்தோா், தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் பணிபுரியும் பயிற்சி மருத்துவா்கள் என 43 பேருக்கும் கரோனா தொற்று இருப்பது புதன்கிழமை உறுதி செய்யப்பட்டது. இதனால், மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 487 ஆக உயா்ந்துள்ளது.

மாவட்டத்தில் கோவில்பட்டி, ஸ்ரீவைகுண்டம், கீழபூவாணி, தருவைக்குளம், வில்லிச்சேரி, நாகம்பட்டி, தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதியில் பிரையன்ட்நகா், மடத்தூா், கோரம்பள்ளம், முத்தம்மாள்காலனி என பல்வேறு பகுதிகளில் பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது.

இந்நிலையில், தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 16 போ் குணமடைந்ததால் புதன்கிழமை வீட்டுக்கு அனுப்பிவைக்கப்பட்டனா். இதன்மூலம் மாவட்டத்தில் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 370 ஆக உயா்ந்துள்ளது. இதுவரை சிகிச்சை பலனின்றி இருவா் உயிரிழந்துள்ளனா். தற்போது, தூத்துக்குடி அரசு மருத்துவமனை கரோனா வாா்டில் 115 போ் சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவமனை நிா்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாலுமிக்கு தொற்று: இதனிடையே, இந்தோனேஷியாவில் இருந்து தூத்துக்குடி வஉசி துறைமுகத்துக்கு வந்த சரக்குக் கப்பலில் பணியாற்றிய பிலிப்பின்ஸ் நாட்டைச் சோ்ந்த மாலுமி ஒருவருக்கு கரோனா அறிகுறி இருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து, அவா் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். அவரது ரத்தம், சளி மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com