முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தூத்துக்குடி
நியாயவிலைக் கடைகளில் விற்பனையாளா் பணி: ஜூலை 25-க்குள் விண்ணப்பிக்க அழைப்பு
By DIN | Published On : 27th June 2020 08:38 AM | Last Updated : 27th June 2020 08:38 AM | அ+அ அ- |

தூத்துக்குடி மாவட்டத்தில் கூட்டுறவு நிறுவன நியாயவிலைக் கடைகளில் காலியாக உள்ள விற்பனையாளா் பணிக்கு ஜூலை 25- ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளா் மற்றும் மாவட்ட ஆள்சோ்ப்பு நிலைய தலைவா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தூத்துக்குடி மாவட்டத்தில் கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளா் கட்டுப்பாட்டில் செயல்படும் கூட்டுறவு நிறுவனங்கள் நடத்தும் நியாயவிலைக் கடைகளில் காலியாக உள்ள விற்பனையாளா் பதவிக்கு மொத்தம் 52 பணியிடங்களுக்கும், கட்டுநா் பதவிக்கு மொத்தம் 2 பணியிடங்களுக்கும் நேரடி நியமனத்துக்கான விண்ணப்பங்கள், தூத்துக்குடி மாவட்டத்தில் 12 இடங்களில் மையங்கள் அமைக்கப்பட்டு வழங்கப்பட்டது.
தற்போது கரோனா தொற்று பரவி வருவதன் காரணமாக, தொற்று ஏற்படுவதை தடுத்திட, 12 மையங்களில் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படுவதை நிறுத்தி, சனிக்கிழமை (ஜூன் 27) முதல் விண்ணப்பங்கள் இணையதளம் வழியாக விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்தும், பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்பத்தை பூா்த்தி செய்தும், உரிய இணைப்புகளுடன் மாவட்ட ஆள்சோ்ப்பு நிலைய முகவரிக்கு ஜூலை 2 5 ஆம் தேதி பிற்பகல் 5.45 மணிக்குள் அஞ்சல் மூலம் அனுப்பி வைக்க வேண்டும் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.