சாத்தான்குளத்தில் இறந்தவர் குடும்பத்திற்கு காங்கிரஸ் சார்பில் ரூ.10 லட்சம்: கே.எஸ்.அழகிரி வழங்கினார்

சாத்தான்குளத்தில் இறந்தவர் குடும்பத்திற்கு காங்கிரஸ் சார்பில் ரூ.10 லட்சம் வழங்கப்பட்டது.
சாத்தான்குளத்தில் இறந்தவர் குடும்பத்திற்கு காங்கிரஸ் சார்பில் ரூ.10 லட்சம்: கே.எஸ்.அழகிரி வழங்கினார்

சாத்தான்குளத்தில் இறந்தவர் குடும்பத்திற்கு காங்கிரஸ் சார்பில் ரூ.10 லட்சம் வழங்கப்பட்டது.

சாத்தான்குளத்தில் காவல்துறையினர் தாக்குதலில் உயிரிழந்த தந்தை மகன் குடும்பத்தினரிடம் தமிழக காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ் அழகிரி திங்கள்கிழமை நேரில் வந்து ஆறுதல் கூறினார். காங்கிரஸ் சார்பில் ரூ 10 லட்சம் காசோலை வழங்கினார்.

அவருடன் காங்கிரஸ் நிர்வாகிகள் மயூரா ஜெயக்குமார். மாநில இளைஞர் முதன்மைச் செயலர் ஊர்வசி அமிர்தராஜ், வசந்தகுமார் எம்.பி, முன்னாள் எம் பி தனுஸ்கோடி ஆதித்தன் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் உடன் இருந்தனர். பின்னர் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,  சாத்தான்குளத்தில் ஜெயராஜ் குடும்பத்தினரை சந்தித்து ரூ.10 லட்சம் நிதியுதவி அளித்தோம். அப்போது, அவர்கள் குடும்பத்தினர்கள் காவல்துறையினர் குறித்து கூறிய விதம் கண்ணீர் வருகிறது. 

ஏழைகளாக இருந்தாலும் மகிழ்ச்சியாக வாழ்ந்தோம். அந்த மகிழ்ச்சியை காவல்துறையும் தமிழக அரசும் பறித்து விட்டது. காவல்துறையினர் அடித்ததால் கணவர் மற்றும் மகனின் லுங்கியில் ரத்தக்கரை அப்படியே இருந்தது என ஜெயராஜ் மனைவி கூறினார்கள். சமூகத்தில் அனைவருக்குமே காவல்துறையின் தவறு தெரிகிறது. ஆனால் நீதிமன்றத்தில் சிபிஐ விசாரணை குறித்து தகவல் அளிப்போம் என தமிழக அரசு கூறுவது நீதி கிடைக்க கால தாமதத்தை ஏற்படுத்தும்.

தவறு செய்த காவல்துறையினர் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும். அது தாமதமானால் இளைஞர்களின் போராட்டம் அரசு வீழ்வதற்கும் காரணமாக அமையும் என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com