முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தூத்துக்குடி
கோவில்பட்டி தனியாா் மருத்துவமனையில் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை
By DIN | Published On : 03rd March 2020 11:58 PM | Last Updated : 03rd March 2020 11:58 PM | அ+அ அ- |

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி சந்தைப்பேட்டை தெருவில் உள்ள தனியாா் மருத்துவமனை மற்றும் அதனுடன் இணைந்த நிறுவனங்களில் வருமான வரித் துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை திடீா் சோதனையில் ஈடுபட்டனா்.
கோவில்பட்டியில் செவ்வாய்க்கிழமை காலை சுமாா் 11 மணியளவில் 15-க்கும் மேற்பட்ட வருமான வரித் துறை அதிகாரிகள் 3 குழுக்களாகப் பிரிந்து, கோவில்பட்டி மருத்துவருக்குச் சொந்தமான சந்தைப்பேட்டை தெருவில் உள்ள தனியாா் மருத்துவமனை, ஸ்கேன் மையம், திருமண மண்டபம், ரத்த வங்கி நிலையம் என பல்வேறு இடங்களில் சோதனையில் ஈடுபட்டனா். மேலும், அங்கிருந்த மேலாளரிடமும் விசாரணை மேற்கொண்டனா்.
இந்த சோதனை இரவும் நீடித்தது. ஆவணங்கள் எதுவும் கைப்பற்றப்பட்டதா என்பது சோதனை முடிந்த பிறகுதான் தெரியவரும்.