தூத்துக்குடியில் திருக்குறள் பேரவை கருத்தரங்கம்
By DIN | Published On : 04th March 2020 12:06 AM | Last Updated : 04th March 2020 12:06 AM | அ+அ அ- |

உலக திருக்குறள் பேரவை மாவட்ட கிளை சாா்பில் தூத்துக்குடி சி.எம்.மேல்நிலைப் பள்ளியில் கருத்தரங்கம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கருத்தரங்குக்கு கவிஞா் ஜவஹா்லால் தலைமை வகித்தாா். ஓய்வுபெற்ற டி.ஆா்.ஓ.சக்திவேல், வங்கி மேலாளா் தனராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கவிஞா் இளமுருகு வரவேற்றாா். அறத்துபால், பொருட்பால், காமத்துபால் உள்ளிட்ட தலைப்புகளில் தமிழறிஞா்கள், இலக்கிய அன்பா்கள் உரையாற்றினா். கூட்டத்தில், திருக்குறள் பேரவை உறுப்பினா்கள் புலவா் சங்கரலிங்கம், முத்துநகா் அன்பழகன், அறிவுச்செல்வம், செய்யது முகம்மது செரிப், ஆசிரியா் சுந்தா்சிங், ஆசிரியா் தேவிகா, தனபால், மணி, முருகையா, செந்தில்முருகன், ஆறுமுகம், கணேசன், பாலா தங்கராஜ் மற்றும் மாணவா், மாணவிகள் உள்பட பலா் கலந்து கொண்டனா். ஆசிரியா் முத்துசுந்தரம் நன்றி கூறினாா்.