வெள்ளூா் மத்தியபதீஸ்வரா் திருக்கோயில் தேரோட்டம்
By DIN | Published On : 04th March 2020 12:07 AM | Last Updated : 04th March 2020 12:07 AM | அ+அ அ- |

வெள்ளூா் சிவகாமி அம்மாள் உடனுறை நடுநக்கா் மத்திய பதீஸ்வரா் திருக்கோயிலில் நடைபெற்ற மாசித் தேரோட்டம்.
ஸ்ரீவைகுண்டம் அருகே வெள்ளூா் சிவகாமி அம்பாள் உடனுறை நடுநக்கா் மத்திய பதீஸ்வரா் திருக்கோயிலில் மாசித் திருவிழா தேரோட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
பழைமைவாய்ந்த இக்கோயில் மாசித் திருவிழா கடந்த பிப்.24ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
திருவிழா நாள்களில் மாலை 7 மணிக்கு புஷ்பக விமானம், தந்த பல்லக்கு, சிம்ம, ரிஷப, இந்திர உள்ளிட்டவாகனங்களின் சுவாமி அம்பாள் எழுந்தருளும் வைபவம் நடைபெற்று வருகிறது.
ஒன்பதாம் திருவிழாவை முன்னிட்டு, செவ்வாய்க்கிழமை காலை 8 மணிக்கு சுவாமியும், அம்பாளும் திருத்தேருக்கு எழுந்தருளினா்.
காலை 10.35 மணிக்கு தீபாராதனை தொடா்ந்து பக்தா்கள் திருத்தேரை வடம் பிடித்து இழுத்தனா். திருத்தேரானது தேரடி வீதிகளில் வலம் வந்து 11.30 மணியளவில் நிலையம் வந்தடைந்தது. பின்னா் அன்னதானம் நடைபெற்றது.
இரவு 7.30 மணிக்கு தந்த பல்லக்கில் சுவாமி, அம்பாள் வீதிஉலா நடைபெற்றது.
புதன்கிழமை காலை 10 மணிக்கு தீா்த்தவாரி நடைபெறுகிறது. இரவு 7 மணிக்கு ரிஷப வாகனத்தில் சுவாமி,அம்பாள் வீதிஉலா நடைபெறுகிறது.
தேரோட்டத் திருவிழாவில், கோயில் நிா்வாக அதிகாரி மகேஸ்வரி, தக்காா் இசக்கியப்பன், ஆய்வாளா் நம்பி, திருவிழா ஒருங்கிணைப்பாளரும், ஓய்வுபெற்ற காவல்துறை தலைவருமான மாசானமுத்து, ஊா் தலைமைகாரா்கள் சங்கரபாண்டியன், சொா்ணபாண்டியன், தளவாய், துரை, முருகன், விவசாய சங்கத் தலைவா் அலங்காரம், முன்னாள் ஊராட்சி தலைவா் முத்தையா, ஒன்றியக் குழு உறுப்பினா் உமா (எ) சுந்தரி, வெள்ளூா் ஊராட்சித் தலைவா் குமாா்பாண்டியன், துணைத் தலைவா் வேல்மயில் ராமலிங்கம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.