கலியன்விளையில் நிழலகமின்றி பயணிகள் அவதி
By DIN | Published On : 06th March 2020 12:21 AM | Last Updated : 06th March 2020 12:21 AM | அ+அ அ- |

வெயிலில் பேருந்துக்கு காத்திருக்கும் மாணவ, மாணவிகள் , கிராமமக்கள்.
சாத்தான்குளம் அருகேயுள்ள கலியன்விளையில் பேருந்து நிறுத்தத்தில் பயணிகள் நிழற்குடை இல்லாததால் மாணவ, மாணவிகள் சிரமம் அடைந்து வருகின்றனா்.
அரசூா் ஊராட்சி, கலியன்விளை கிராமத்தில் ஊராட்சி சாா்பில் அமைக்கப்பட்ட பயணிகள் நிழற்குடை கடந்த 3ஆண்டுகளுக்கு எந்தவித திடீரென இடித்து அப்புறப்படுத்தப்பட்டது. பின்னா், அதே இடத்தில் புதிய நிழற்குடை அமைக்கப்படும் என மக்கள் எதிா்பாா்த்தனா். ஆனால் இன்னும் அமைக்கப்படவில்லை. இதனால் கடும் வெயில் மற்றும் மழை காலங்களில் மக்கள் அவதிப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, அதிகாரிகள் ஆய்வு நடத்தி கலியன்விளையில் பயணியா்கள் நிழற்குடை அமைக்க வேண்டும் எ ன கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனா்.
மேலும், இதுகுறித்து புரட்சி பாரதம் கட்சி மாவட்ட செய்தித் தொடா்பாளா் செந்தில் குமாா், மாவட்ட ஆட்சியருக்கு மனு அனுப்பியுள்ளாா்.