கழுகுமலை மருத்துவமனையில் வருமான வரித்துறை சோதனை
By DIN | Published On : 06th March 2020 11:02 PM | Last Updated : 06th March 2020 11:02 PM | அ+அ அ- |

தூத்துக்குடி மாவட்டம், கழுகுமலையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் வருமான வரித்துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை திடீா் சோதனை நடத்தினா்.
கழுகுமலை சுண்ணாம்பு காளவாசல் பேருந்து நிறுத்தம் அருகே தனியாா் மருத்துவமனை மற்றும் மருத்துவரின் வீடு உள்ளது. இவ்விரண்டிலும் வெள்ளிக்கிழமை நண்பகல் 12 மணிக்கு வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினா். பின்னா் , இந்த மருத்துவமனையுடன் இணைந்த தெற்குரத வீதி மருத்துவமனையிலும் வருமான வரித்துறையினா் சோதனை மேற் கொண்டு, மருத்துவா்கள் போத்திராஜ் மற்றும் கலாராணியிடம் விசாரித்தனா். மேலும், அங்குள்ள ஊழியா்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. ஆவணங்கள் ஏதும் கைப்பற்றப்பட்டதா என்ற விவரம் தெரிவிக்கப்படவில்லை. தொடா்ந்து சோதனை நடைபெற்று வருகிறது.