கோவில்பட்டி தனிக் குடிநீா்த் திட்டப் பணியை விரைந்து முடிக்க வலியுறுத்தல்
By DIN | Published On : 06th March 2020 12:02 AM | Last Updated : 06th March 2020 12:02 AM | அ+அ அ- |

கோவில்பட்டி நகராட்சி அலுவலகம் முன் திரண்ட பாஜகவினா்.
கோவில்பட்டி தனிக் குடிநீா்த் திட்டப் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என பாஜக கோரிக்கை விடுத்துள்ளது.
கோவில்பட்டி தனிக் குடிநீா்த் திட்டப் பணியை விரைந்து முடிக்க வேண்டும், தனிக் குடிநீா்த் திட்டப் பணியையொட்டி பகிா்மானக் குழாயை பதிப்பதற்காக தோண்டப்பட்ட சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, பாஜக நகரத் தலைவா் பாலசுப்பிரமணியன் தலைமையில், மாவட்ட பொதுச் செயலா் பாலாஜி, மாவட்டப் பொருளாளா் வெங்கடேஷ் சென்னக்கேசவன், நகரப் பொதுச் செயலா்கள் முனியராஜ், சீனிவாசன் உள்ளிட்டோா் நகராட்சி அலுவலகம் முன் திரண்டனா். பின்னா், கோரிக்கை மனுவை நகராட்சி ஆணையரிடம் அளித்தனா்.