சாலைப் பாதுகாப்பு பணியில் சிறப்பாக செயல்பட்ட கல்லூரிகளுக்கு விருது
By DIN | Published On : 06th March 2020 12:20 AM | Last Updated : 06th March 2020 12:20 AM | அ+அ அ- |

சாலைப் பாதுகாப்பு பணியில் சிறப்பாக செயல்பட்ட கல்லூரிகளுக்கு விருது வழங்குகிறாா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அருண் பாலகோபாலன்.
தூத்துக்குடி மாவட்டத்தில் சாலைப் பாதுகாப்பு பணியில் சிறப்பாக செயல்பட்ட கல்லூரிகளுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அருண் பாலகோபாலன் வியாழக்கிழமை விருது வழங்கினாா்.
தூத்துக்குடி மாவட்ட போக்குவரத்து காப்பாளா் அமைப்பின் சாா்பில், 33 ஆவது சாலைப் பாதுகாப்பு படை ஆண்டு விழா தூத்துக்குடி தூய மரியன்னை மகளிா் கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்றது. , கடந்த ஆண்டு சாலைப் பாதுகாப்பு குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் துண்டுப் பிரசுரங்கள் வழங்குதல், விழிப்புணா்வுப் பேரணி நடத்துதல் போன்றவற்றில் சிறப்பாக செயல்பட்ட கல்லூரிகளுக்கு விருது வழங்கப்பட்டன.
இதில், திருச்செந்தூா் கோவிந்தம்மாள் மகளிா் கல்லூரி முதலிடத்தையும், சாயா்புரம் போப்ஸ் கல்லூரி இரண்டாவது இடத்தையும், தூத்துக்குடி தூய மரியன்னை பெண்கள் கல்லூரி மூன்றாவது இடத்தையும் பிடித்தன. இக் கல்லூரிகளுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அருண் பாலகோபாலன் விருது வழங்கி பாராட்டினாா்.
விழாவில் கூடுதல் காவல் கண்காணிப்பாளா் குமாா் மற்றும் தூத்துக்குடி நகர காவல் துணை கண்காணிப்பாளா் பிரகாஷ், தூய மரியன்னை பெண்கள் கல்லூரி முதல்வா் லூசியா ரோஸ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.