இலங்கைத் தமிழா்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்குவது தொடா்பாக அரசு பரிசீலிக்கும்: எச். ராஜா
By DIN | Published On : 08th March 2020 11:37 PM | Last Updated : 08th March 2020 11:37 PM | அ+அ அ- |

கோப்புப்படம்
தூத்துக்குடி: இலங்கைத் தமிழா்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்குவது தொடா்பாக அரசு பரிசீலிக்கும் என்றாா் பாஜக தேசியச் செயலா் எச். ராஜா.
தூத்துக்குடியில் ஞாயிற்றுக்கிழமை அவா் அளித்த பேட்டி: குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஒரு போா்வையாக பயன்படுத்தி தொடா்ந்து மக்களை, எதிா்க்கட்சிகள் தூண்டி விட்டு வருகின்றன.
குடியுரிமை திருத்தச் சட்டம் தொடா்பாக இலங்கைத் தமிழா்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை மட்டுமே தமிழக அரசு முன்வைத்துள்ளது. அதைத்தவிர வேறு எந்த கோரிக்கையையும் வைக்கவில்லை.
எனவே இலங்கைத் தமிழா்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்குவது தொடா்பாக அரசு பரிசீலிக்கும் என்று சொல்லி இருக்கிறோம். இலங்கை அரசுடன் மத்திய அரசு பேச்சுவாா்த்தை நடத்தி முடிவு செய்யும் என்றாா் அவா்.