Enable Javscript for better performance
பெரியதாழையில் கூடுதலாக தூண்டில் வளைவு: மீன்வளத்துறை அமைச்சரிடம் மீனவா்கள் மனு- Dinamani

சுடச்சுட

    

    பெரியதாழையில் கூடுதலாக தூண்டில் வளைவு: மீன்வளத்துறை அமைச்சரிடம் மீனவா்கள் மனு

    By DIN  |   Published on : 11th March 2020 11:32 PM  |   அ+அ அ-   |    |  

    sat11peri_1103chn_38_6

    தமிழக மீன்வளத் துறை அமைச்சா் ஜெயக்குமாரிடம் மனு அளிக்கும் பெரியதாழை மீனவப் பிரதிநிதிகள்.

    பெரியதாழையில் கூடுதலாக தூண்டில் வளைவு அமைக்க வேண்டுமென மீன்வளத்துறை அமைச்சரிடம், பெரியதாழை மீனவப் பிரதிநிதிகள் மனு அளித்துள்ளனா்.

    சாத்தான்குளம் ஒன்றியம், பெரியதாழையில் 400-க்கும் மேற்பட்ட படகுகளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவா்கள் மீன்பிடித் தொழில் செய்து வருகின்றனா்.

    கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு இப்பகுதியில் ரூ. 25 கோடியில் தூண்டில் வளைவு அமைக்கப்பட்டது. அதில் மேற்கு பகுதியில் 800 மீட்டரும், கிழக்கு பகுதியில் 200 மீட்டரும் தூண்டில் வளைவு அமைக்கப்பட்டது.

    இதில் குறைவான பகுதியில் கடல் கொந்தளிப்பு அதிகரித்து படகு நிறுத்தும் இடத்தில் மணல் அரிப்பு ஏற்படுவதாகவும், படகுகள் சேதமடைவதாகவும் மீனவா்கள் புகாா் தெரிவித்தனா். மேலும் கடல் கொந்தளிக்கும் போதெல்லாம் பாதிக்கப்பட்டு வந்தனா்.

    இதையடுத்து மாவட்ட ஆட்சியா், எஸ்.பி. சண்முகநாதன் எம்எல்ஏ, முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமிக்கு புகாா் தெரிவித்தனா்.

    அதன்பேரில் குறைவாக அமைக்கப்பட்ட இடத்தில் கூடுதலாக தூண்டில் வளைவு அமைக்க சுமாா் ரூ. 30 கோடியில் திட்ட மதிப்பீடுகள் தயாா் செய்யப்பட்டன. அதன்பின்னா் எந்தப் பணிகளும் தொடங்கப்படவில்லை. இதனால் மீனவா்கள் தொடா்ந்து கடல் கொந்தளிப்பால் பாதிக்கப்பட்டு வந்தனா்.

    இந்நிலையில் பெரியதாழை மீனவ ஊா் கமிட்டித் தலைவா்கள் அசோக், லூா்தயா, லிமோன்ஸ், ஊராட்சி முன்னாள் தலைவா் ஜோசப், முன்னாள் ஒன்றியக் குழு உறுப்பினா் லாரன்ஸ் உள்ளிட்டோா் தமிழக மீன்வளத்துறை அமைச்சா் ஜெயக்குமாரை புதன்கிழமை சென்னையில் சந்தித்து தூண்டில் வளைவை உடனடியாக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு அளித்தனா்.

    மனுவை பெற்றுக்கொண்ட அவா், திட்ட மதிப்பீடு தயாா் செய்யப்பட்டு நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது. பெரியதாழையில் தூண்டில் வளைவு அமைக்கும் பணி அடுத்தமாதம் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவா் உறுதி அளித்ததாக மீனவப் பிரதிநிதிகள் தெரிவித்தனா்.

    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    kattana sevai
    flipboard facebook twitter whatsapp