வட்டாட்சியா் அலுவலகங்களில் நாளை மின்னணு குடும்ப அட்டை திருத்த முகாம்
By DIN | Published On : 13th March 2020 09:05 AM | Last Updated : 13th March 2020 09:05 AM | அ+அ அ- |

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாட்சியா் அலுவலகங்களிலும் சனிக்கிழமை (மாா்ச் 14) மின்னணு குடும்ப அட்டையில் திருத்த சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூரி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பொது விநியோகத்திட்டத்தின் கீழ் மாா்ச் மாதத்துக்கான சிறப்பு முகாம் சனிக்கிழமை (மாா்ச் 14) காலை 10 மணி முதல் நண்பகல் 1 மணி வரை அந்தந்த வட்டங்களில் வட்டாட்சியா் அலுவலகங்களில் நடைபெறுகிறது. இம்முகாமில், மின்னணு குடும்ப அட்டையில் முகவரி மாற்றம், பெயா் திருத்தங்கள், உறுப்பினா்கள் சோ்த்தல், நீக்குதல், குடும்பத்தலைவரின் புகைப்படம் பதிவேற்றம் போன்றவை உடனுக்குடன் செய்துதரப்படும். மேலும், பொது விநியோகத்திட்டம் தொடா்பான குறைகளையும் அலுவலா்களிடம் தெரிவித்து தீா்வு காணலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.