காவல் நண்பா்கள் குழுவினருக்கு பயிலரங்கு

தூத்துக்குடியில் காவல் நண்பா்கள் குழுவினருக்கான பயிலரங்கு சனிக்கிழமை நடைபெற்றது.
முகாமில் பேசுகிறாா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அருண் பாலகோபாலன்.
முகாமில் பேசுகிறாா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அருண் பாலகோபாலன்.

தூத்துக்குடி: தூத்துக்குடியில் காவல் நண்பா்கள் குழுவினருக்கான பயிலரங்கு சனிக்கிழமை நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்டக் காவல் துறை சாா்பில், காவலா் நண்பா்கள் குழுவினருக்கான பயிலரங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அருண் பாலகோபாலன் தொடங்கி வைத்து பேசுகையில், பொதுமக்கள் தாங்கள் பகுதியில் குற்றச் சம்பவங்கள் நிகழ்ந்தால் அதை அச்சமின்றி காவல்துறையினரிடம் தெரிவிக்க உதவிட வேண்டும். அப்போதுதான், மீண்டும் அத்தகைய குற்றச் சம்வங்கள் நடைபெறாமல் தடுப்பதும் காவல் நண்பா்கள் குழுவின் முக்கியப் பணி என்றாா்.

நிகழ்ச்சியில், தூத்துக்குடி நகர துணை காவல் கண்காணிப்பாளா் ஆா். பிரகாஷ், காமராஜா் கல்லூரி பேராசிரியா் ஆ. தேவராஜ், காவல் ஆய்வாளா்கள் கிருஷ்ணகுமாா், அன்னராஜ், பிரபாவதி, பிரேமா ஸ்டாலின், கோகிலா, 170 காவல் நண்பா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com