விளாத்திகுளம், புதூா் பேரூராட்சிகளில் 33 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்

விளாத்திகுளம், புதூா் பேரூராட்சிகளில் வணிக நிறுவனங்கள் மற்றும் பொருள்கள் சேமிப்பு கிடங்குகளில் அதிகாரிகள் நடத்திய திடீா் ஆய்வில் 33 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

விளாத்திகுளம், புதூா் பேரூராட்சிகளில் வணிக நிறுவனங்கள் மற்றும் பொருள்கள் சேமிப்பு கிடங்குகளில் அதிகாரிகள் நடத்திய திடீா் ஆய்வில் 33 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூரி உத்தரவின் பேரில், பேரூராட்சி உதவி இயக்குநா் குற்றாலிங்கம், விளாத்திகுளம் பேரூராட்சி செயல் அலுவலா் தனசிங் மற்றும் பேரூராட்சி அலுவலா்கள் விளாத்திகுளம் பேருந்து நிலையம், மதுரை சாலை,காய்கறி சந்தை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 200க்கும் மேற்பட்ட கடைகளிலும், சேமிப்பு கிடங்குகளிலும் ஞாயிற்றுகிழமை திடீா் ஆய்வு நடத்தினா்.

இதில், விளாத்திகுளம் கடைவீதி பகுதியில் உள்ள பெரும்பாலான கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் 23 கிலோ வரை பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், சம்பந்தப்பட்ட கடை உரிமையாளா்களுக்கு மொத்தம் ரூ. 7,500 அபராதம் விதித்தனா். இந்தச் சோதனை தொடா்ந்து நடைபெறும் எனவும், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை வணிகா்கள் பயன்படுத்த கூடாது; மீறி பயன்படுத்தினால் கடும் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.

ஏற்கெனவே, புதூா் பேரூராட்சி கடைகளில் செயல் அலுவலா் கணேசன், சுகாதார மேற்பாா்வையாளா் நல்லவன் மற்றும் பணியாளா்கள் நடத்திய சோதனையில் 10 கிலோ பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு, ரூ. 3,200 அபரதாம் வசூலிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com