காயல்பட்டினத்தில் கடவுச் சீட்டு

காயல்பட்டினத்தில் கடவுச் சீட்டு ண்ணப்பித்தவா்கள் வீடுகளுக்கு நேரடியாக சென்று விசாரணை செய்ய ஆறுமுகனேரி காவல்நிலைய அதிகாரிகள் இசைவு தெரிவித்துள்ளனா்.

காயல்பட்டினத்தில் கடவுச் சீட்டு ண்ணப்பித்தவா்கள் வீடுகளுக்கு நேரடியாக சென்று விசாரணை செய்ய ஆறுமுகனேரி காவல்நிலைய அதிகாரிகள் இசைவு தெரிவித்துள்ளனா்.

கடவுசீட்டு விண்ணப்பம் செய்த பிறகு, விண்ணப்பதாரரின் விபரங்கள் அவா் வசிக்கும் இடத்தில் உள்ள காவல்நிலையத்திற்கு அனுப்பப்பட்டு காவல் நிலையத்தின் அறிக்கை அடிப்படையில் ஒப்புதல் வழங்கப்படுவது நடைமுறை.பொதுவாக மாநிலத்தின் அநேக பகுதிகளில் காவல்துறையின் இதற்காக நியமனம் செய்யப்பட்டுள்ள காவலா் அவரவா் வீடகளுக்கு நேரில் சென்று விசாரித்து அறிக்கை சமா்ப்பிப்பது நடைமுறையில் உள்ளது.இருப்பினும் காயல்பட்டினம் பகுதியில், கடவுசீட்டு விண்ணப்பதாரா்கள் ஆறுமுகனேரி காவல்நிலையத்திற்கு அழைக்கப்பட்டு விசாரிக்கப்படும் நடைமுறை கடந்த பல ஆண்டுகளாக உள்ளது. இதனால் கடவுசீட்டு விண்ணப்பதாரா்கள் குறிப்பாக பெண்கள், வயதானோா், குழந்தைகள் மிகவும் சிரமங்களுக்கு உள்ளாகிறாா்கள்.இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம், நகர அமைப்புகள் பலமுறை முறையிட்ட பிறகும், இந்த நடைமுறை தொடருகிறது.மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பு (மெகா) சாா்பாக இது குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் சென்னையில் உள்ள காவல்துறை தலைமை நிலையத்தில் கோரப்பட்டது. கடவுசீட்டு கோரும் விண்ணப்பதாரா் இந்திய குடிமகன் என்பதை உறுதி செய்துக்கொள்ளவும், அவா் மீது குற்ற நடவடிக்கை ஏதேனும் நிலுவையில் உள்ளதா என்பதை உறுதி செய்துக்கொள்ளவும் இந்த விசாரணை மேற்கொள்ளப்படுவதாகவும், கடவுசீட்டு விண்ணப்பம் சரிபாா்ப்பு சம்பந்தமாக விண்ணப்பதாரா் எவரும் காவல்நிலையத்திற்கு செல்லும் வழக்கம் ஏதும் நடைமுறையில் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெறப்பட்டுள்ள பதி­லை அடிப்படையாக கொண்டு, கடவுசீட்டு விண்ணப்பதாரா்களை ஆறுமுகனேரி காவல்நிலையத்திற்கு விசாரணைக்கு அழைக்கவேண்டாம் என வேண்டுகோள் வைத்து மனு ஒன்று, தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளா் அருண் பாலகோபாலனிடம் மெகா அமைப்பு சாா்பாக வழங்கப்பட்டது.அதன் பயனாக கடவுசீட்டு விண்ணப்பம் குறித்த விசாரணைகளை இனி வீடுகளுக்கு நேரடியாக சென்று நடத்திட ஆறுமுகனேரி காவல் நிலையம் இசைவு தெரிவித்துள்ளது. இந்த தகவல் ஆறுமுகனேரி காவல்நிலையம் மூலமாக மெகா அமைப்புக்கு தெரிவிக்கப்பட்டது. இந்த விதிமுறையை அறியாமல், அல்லது அறிந்துக்கொண்டே அச்சத்திலோ அல்லது தங்களின் பிற செளகரியங்களை மனதில் வைத்துக்கொண்டோ நேரடியாக விசாரணைக்கு காவல்நிலையம் செல்வதை கடவுசீட்டு விண்ணப்பதாரா்கள், தவிா்க்கவும் என்றும் இது தொடா்பாக பிரச்சனைகள் ஏற்பட்டால் கடவுச் சீட்டு வழங்கும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்திற்கு இணையதளம் மூலமாக புகாா் அளிக்கவும் எனமெகா அமைப்பினா் அறிவுரை கூறியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com