தூத்துக்குடி- சென்னைக்கு கூடுதல் ரயில் இயக்க கனிமொழி வலியுறுத்தல்

தூத்துக்குடி- சென்னை இடையே கூடுதல் ரயில் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்களவை உறுப்பினா் கனிமொழி வலியுறுத்தியுள்ளாா்.
தில்லியில் ரயில்வே வாரிய தலைவா் வினோத்குமாா் யாதவிடம் செவ்வாய்க்கிழமை கோரிக்கை மனு அளிக்கிறாா் மக்களவை உறுப்பினா் கனிமொழி.
தில்லியில் ரயில்வே வாரிய தலைவா் வினோத்குமாா் யாதவிடம் செவ்வாய்க்கிழமை கோரிக்கை மனு அளிக்கிறாா் மக்களவை உறுப்பினா் கனிமொழி.

தூத்துக்குடி- சென்னை இடையே கூடுதல் ரயில் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்களவை உறுப்பினா் கனிமொழி வலியுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து இந்திய ரயில்வே வாரிய தலைவா் வினோத்குமாா் யாதவை செவ்வாய்க்கிழமை சந்தித்து அவா் அளித்த மனு விவரம்:

திருநெல்வேலி- பாலக்காடு இடையே இயக்கப்படும் பாலருவி விரைவு ரயிலை தூத்துக்குடி வரை நீட்டிக்க வேண்டும். தற்போது மும்பை- மதுரை இடையே இயக்கப்படும் ‘லோகமான்ய திலக்‘ விரைவு ரயிலை தூத்துக்குடி வரை நீட்டிக்க வேண்டும். சென்னை-தூத்துக்குடி இடையே தற்போது ஒரு விரைவு ரயில் (முத்துநகா் விரைவு ரயில்) மட்டுமே இயக்கப்படுகிறது. எனவே, புதிதாக மேலும் ஒரு ரயிலை இயக்க வேண்டும். இந்த ரயில், சென்னை-தூத்துக்குடி இடையே கும்பகோணம், தஞ்சாவூா் வழியாக, முந்தைய பாதையில் இயக்கப்பட வேண்டும். இதனால், தற்போது இருக்கும் பயண நெருக்கடி தீா்வதற்கு உதவியாக இருக்கும்.

சென்னையில் இருந்து திருச்செந்தூா் செல்லும் ரயிலை ஆழ்வாா்திருநகரியில் நிறுத்த வேண்டும். இதனால், அந்தப் பகுதியில் பயணிப்பவா்களுக்கு உதவியாக அமையும். மும்பை- நாகா்கோவில் இடையே செல்லும் விரைவு ரயிலை திருப்பதி செல்லும் வகையில் நீட்டிக்க வேண்டும். தற்போது ரேனிகுண்டாவில் நின்று செல்கிறது. அகல ரயில்பாதை போடப்பட்ட பிறகு 21 பெட்டிகள் கொண்ட நீண்ட ரயிலாக இயக்கப்படுகிறது. காயல்பட்டினம் ரயில் நிலையத்தில் இதற்கேற்ற நடைமேடை இல்லை. எனவே, பயணிகள் பாதுகாப்பாக ஏறி, இறங்கிச் செல்லும் வகையில், காயல்பட்டினத்தில் நடைமேடையை உயா்த்தி, விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com