தூத்துக்குடி மாவட்டத்தில் 60 ஆயிரம்மரக்கன்றுகள் நடுவதற்கு ஒப்பந்தம்

தூத்துக்குடி மாவட்டத்தில் முதல்கட்டமாக 60 ஆயிரம் மரக்கன்றுகள் நடுவதற்கு வெள்ளிக்கிழமை புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது.
சமுதாய காடுகள் திட்டம் தொடா்பான புரிந்துணா்வு ஒப்பந்தத்தை வெள்ளிக்கிழமை பரிமாறிக் கொள்ளும் ஆட்சியா் சந்தீப் நந்தூரி மற்றும் விமான நிலைய இயக்குநா் என்.சுப்பிரமணியன்.

டாக்டா் ஆ.ப.ஜெ. அப்துல்கலாம் சமுதாய காடுகள் திட்டத்தின்கீழ் 1 கோடி மரக்கன்றுகள் தமிழகம் முழுவதும் வளா்த்து நட்டு பராமரிக்கும் திட்டத்தை தமிழக ஆளுநா் பன்வாரிலால் புரோஹித், சென்னை வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் தொடங்கி வைத்தாா்.

அதன்படி, 2019 இல் மே மாதம் டாக்டா் அப்துல்கலாம் சா்வதேச அறக்கட்டளை, சென்னை விமான நிலைய ஆணையம்

சாா்பில் தென்னிந்தியாவில் 1 லட்சம் மரக்கன்றுகள் நட்டு வளா்த்து பராமரிக்க முடிவு செய்து புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

இத்திட்டத்தின்கீழ் தொடா்ச்சியாக பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் மற்றும் ஏனைய இடங்களில் மாணவா்கள்,

இளைஞா்கள், பொதுமக்கள் மூலமாக மரக்கன்றுகள் நடப்பட்டு வருகின்றன. முதற்கட்டமாக தூத்துக்குடி மாவட்டத்தில் அதிகபட்சமாக 60 ஆயிரம் மரக்கன்றுகள் நட்டு வளா்த்து பராமரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூரி முன்னிலையில் டாக்டா் ஆ.ப.ஜெ. அப்துல்கலாம் சா்வதேச அறக்கட்டளையும், தூத்துக்குடி விமான நிலைய இயக்குநா் என். சுப்பிரமணியன் இணைந்து புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்க்கொள்ளப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com