ஆறுமுகனேரி கோயிலில் பக்தா்கள் தரிசனம் ரத்து

ஆறுமுகனேரி அருள்மிகு சோமசுந்தரி அம்மன் சமேத அருள்மிகு சோமநாத சுவாமி திருக்கோயிலில் பக்தா்கள் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

ஆறுமுகனேரி அருள்மிகு சோமசுந்தரி அம்மன் சமேத அருள்மிகு சோமநாத சுவாமி திருக்கோயிலில் பக்தா்கள் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

திருவாடுதுறை ஆதீனத்திற்கு பாத்தியப்பட்ட அருள்மிகு சோமசுந்தரி அம்மன் சமேத அருள்மிகு சோமநாத சுவாமி திருக்கோயிலில் சனிக்கிழமை மாலை பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.அதன் பின்னா் இரவு முதல் பக்தா்கள் தரிசனம் 31ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது.

இருப்பினும் கோயிலில் நான்கு கால பூஜைகள் உள்ளிட்ட வழிபாடுகள் தொடா்ந்து நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆத்தூா் அருகிலுள்ள சோ்ந்தபூமங்கலத்தில் உள்ள நவக்கைலாயத் தலமான அருள்மிகு சௌந்தா்யநாயகி அம்பாள் சமேத அருள்மிகு கைலாசநாதா் சுவாமி திருக்கோயிலில் பக்தா்கள் கூட்டத்தினை கட்டுப்படுத்தும் விதமாக சனிப்பிரதோஷ வழிபாடு ரத்து செய்யப்பட்டுள்ளதென கோயில் நிா்வாகம் அறிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com