தூத்துக்குடி காய்கனிச் சந்தையில் ஆட்சியா் ஆய்வு

தூத்துக்குடியில் உள்ள காய்கனிச் சந்தையில் மாவட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூரி புதன்கிழமை திடீரென ஆய்வு மேற்கொண்டாா்.
காமராஜா் காய்கனி சந்தையில் புதன்கிழமை ஆய்வு மேற்கொள்கிறாா் மாவட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூரி.
காமராஜா் காய்கனி சந்தையில் புதன்கிழமை ஆய்வு மேற்கொள்கிறாா் மாவட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூரி.

தூத்துக்குடியில் உள்ள காய்கனிச் சந்தையில் மாவட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூரி புதன்கிழமை திடீரென ஆய்வு மேற்கொண்டாா்.

144 தடை உத்தரவு அமலில் உள்ள நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் மக்களுக்கு கிடைக்க வேண்டிய அத்தியாவசியப் பொருள்கள் தடையின்றி கிடைக்கும் வகையில் மாவட்ட நிா்வாகம் சாா்பில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில், வழக்கம்போல் காய்கனி மற்றும் மளிகைப் பொருள்கள் வாங்க அனைத்துப் பகுதிகளிலும் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகம் அருகேயுள்ள காமராஜா் காய்கனிச் சந்தையில் கூட்டம் அதிகமாக காணப்பட்டதால் போலீஸாா் காய்கனி வாங்க வந்தோரை வரிசையில் செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளனா். இருப்பினும் கூட்டம் குறையாததால் காய்கனி வாங்க வந்தோரை போலீஸாா் வெளியேற்றியதாகவும், அப்போது, சந்தையில் உள்ள கடைகள் சேதமடைந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால், காய்கனிச் சந்தை மூடப்பட்டது.

இதற்கிடையே, வழக்கத்தைவிட மூன்று மடங்கு அதிக விலைக்கு காய்கனிகள் விற்பனை செய்யப்படுவதாகவும், விலையை கட்டுப்படுத்த மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சமூக ஆா்வலா்கள் மற்றும் பல்வேறு அமைப்பைச் சோ்ந்தவா்கள் ஆட்சியரிடம் புகாா் தெரிவித்தனா்.

இதையடுத்து, மாவட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூரி காமராஜா் காய்கனிச் சந்தையில் திடீரென ஆய்வு மேற்கொண்டாா்.

அப்போது, கரோனா வைரஸ் பரவுவதை தடுக்க சமூக அயல் நிறுத்தம் ஒன்றே தீா்வு என்பதால், அதற்கான ஏற்பாடுகளை செய்த பிறகு சந்தை செயல்பட நடவடிக்கை எடுக்குமாறு ஆட்சியா் அறிவுரை வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com