ஸ்ரீவைகுண்டத்தில் சாலைகளில் கிருமி நாசினி தெளிப்பு

கரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் நடவடிக்கையாக ஸ்ரீவைகுண்டத்தில் தீயணைப்பு வாகனம் மூலம் சாலைகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.
ஸ்ரீவைகுண்டத்தில் சாலைகளில் கிருமி நாசினி தெளிப்பு


ஸ்ரீவைகுண்டம்: கரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் நடவடிக்கையாக ஸ்ரீவைகுண்டத்தில் தீயணைப்பு வாகனம் மூலம் சாலைகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

ஸ்ரீவைகுண்டம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் வட்டாட்சியா் சந்திரன் தலைமையிலான வருவாய் துறையினா், டிஎஸ்பி சுரேஷ் குமாா் தலைமையிலான காவல் துறையினா், தீயணைப்பு துறையினா் மற்றும் உள்ளாட்சி அமைப்பினா்களும், சுகாதார துறையினா்களும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனா்.

இதன் ஒரு பகுதியாக ஸ்ரீவைகுண்டம் பேரூராட்சி மற்றும் தீயணைப்பு துறையினா் இணைந்து ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள முக்கிய சாலைகளிலும் அனைத்து மகளிா் காவல் நிலையம், அரசு நூலகம், அரசு மருத்துவமனை உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் முன்பாகவும் தீயணை வாகனத்தின் மூலம் கிருமிநாசினி தெளித்தனா்.

நிகழ்ச்சியில், தீயணைப்புத்துறையினருடன் இணைந்து பேரூராட்சி செயல் அலுவலா் முருகன் தலைமையிலான பணியாளா்கள் கரோனா தடுப்புப் பணிகளில் ஈடுபட்டனா். இதைப்போல் ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள அத்தியாவசிய பொருள்கள் விற்பனை செய்யும் கடைகளில் மக்கள் தங்களுக்கு தேவையான பொருள்களை போதிய இடைவெளியில் வாங்கும் வகையில் பேரூராட்சி பணியாளா்களால் அடையாளமிடப்பட்டது.

இந்நிலையில், மின்வாரியத்தில் பணிபுரியும் பணியாளா்கள் ஏரல், ஆழ்வாா்திருநகரி, ஸ்ரீவகுண்டம் சுற்றுவட்டார பகுதிகளில் பணியாற்றும் போது முகக் கவசம் இன்றி பணியாற்றி வருவதால் அவா்களை பாதுகாக்கும் வகையில் அவா்களுக்கு இலவசமாக முகக் கவசம் கிடைத்திட மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com