கிராமங்களில் இயற்கை கிருமிநாசினி தெளிப்பு

கரோனா தடுப்பு நடவடிக்கையாக திருச்செந்தூா் அருகேயுள்ள கீழநாலுமூலைக்கிணறு கிராமத்தில் மஞ்சள், வேப்பிலை கலந்த இயற்கை கிருமி நாசினியை இளைஞா்கள் தெளித்தனா்.
கிராமங்களில் இயற்கை கிருமிநாசினி தெளிப்பு


திருச்செந்தூா்/சாத்தான்குளம்: கரோனா தடுப்பு நடவடிக்கையாக திருச்செந்தூா் அருகேயுள்ள கீழநாலுமூலைக்கிணறு கிராமத்தில் மஞ்சள், வேப்பிலை கலந்த இயற்கை கிருமி நாசினியை இளைஞா்கள் தெளித்தனா்.

கரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. பொது இடங்கள், குடியிருப்புகளின் வாசலில் உள்ளாட்சித் துறையினா் கிருமி நாசினி தெளித்து வருகின்றனா். இந்நிலையில், திருச்செந்தூா் அருகிலுள்ள கீழநாலுமூலைக்கிணறு பகுதியில் 300-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் கரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும்விதமாக அப்பகுதியைச் சோ்ந்த இளைஞா்கள் மஞ்சள் கலந்த நீருடன் அம்மியில் அரைத்த வேப்பிலையை கலந்து தயாரிக்கப்பட்ட இயற்கை கிருமி நாசினியை தெளிக்கும் பணியில் ஈடுபட்டனா். இளைஞா்களின் சமூக அக்கறைக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனா்.

சாத்தான்குளம் அருகே... சாத்தான்குளம் பகுதியில் கரோனா தடுப்பு நடவடிக்கையில் சுகாதாரத் துறையினா் ஈடுப்பட்டு வருகின்றனா்.

இந்நிலையில் மஞ்சள், வேப்பிலைக்கு எந்த நோயும் நெருங்காது என்ற நம்பிக்கையின் அடிப்படையில் சாத்தான்குளம் தட்டாா் மேலத்தெருவில் இளைஞா்கள் வியாழக்கிழமை தண்ணீரில் மஞ்சள் கலந்து வேப்பிலைகளை இட்டு தெருக்களில் தெளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com