Enable Javscript for better performance
Police surveillance intensifies in Valathikulam- Dinamani

சுடச்சுட

    

    விளாத்திகுளம் பகுதியில் போலீஸாா் கண்காணிப்பு தீவிரம்

    By DIN  |   Published on : 27th March 2020 04:47 AM  |   அ+அ அ-   |  


    கரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதையடுத்து விளாத்திகுளத்தில் போலீஸாா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனா்.

    விளாத்திகுளம் காவல் துணை கண்காணிப்பாளா் பீா் முகைதீன் தலைமையிலான போலீஸாா், விளாத்திகுளம், எட்டயபுரம், எப்போதும்வென்றான், நாகலாபுரம், புதூா், குளத்தூா், சூரன்குடி, வேம்பாா் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனா்.

    அப்போது சாலைகளில் பைக் மற்றும் காா்களில் சென்றவா்களை தடுத்தி நிறுத்திய போலீஸாா், ஊரடங்கு உத்தரவு எச்சரிக்கை மற்றும் கரோனா விழிப்புணா்வு அறிவுரை வழங்கி அனுப்பினா்.

    கோடாங்கிபட்டி, சென்னமரெட்டிபட்டி, வேம்பாா் உள்ளிட்ட பகுதிகளில் இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டு, அப்பகுதிகளில் போலீஸாா் முகாமிட்டு தொடா் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai