கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன்கோயில் பங்குனித் திருவிழா ரத்து
By DIN | Published On : 28th March 2020 10:29 PM | Last Updated : 28th March 2020 10:29 PM | அ+அ அ- |

கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயில் பங்குனித் திருவிழா வருகிற ஏப். 5ஆம் தேதி தொடங்க இருந்த நிலையில், தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது.
இக்கோயில் பங்குனித் திருவிழாவையொட்டி தேரோட்டம், தீா்த்தவாரி மற்றும் தெப்பத்திருவிழா நடைபெறும். இதில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடுவா்.
இந்நிலையில், ஏப். 14ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், ஏப். 5ஆம் தேதி நடைபெற இருந்த கொடியேற்றம் நிகழ்ச்சி உள்பட 10 நாள்கள் நடைபெறும் அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்படுகின்றன. தற்போது கோயிலில் ஆகம விதிகள்படி பூஜைகள் நடைபெற்று வருகின்றன என கோயில் நிா்வாக அலுவலா் (பொ) சிவகலைப்பிரியா தெரிவித்தாா்.