திருச்செந்தூரில் கிராம ஊராட்சிகளுக்கு கிருமி நாசினி தெளிப்பான்
By DIN | Published On : 28th March 2020 05:45 AM | Last Updated : 28th March 2020 05:45 AM | அ+அ அ- |

திருச்செந்தூா் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 11 கிராம ஊராட்சிகளுக்கு கரோனா தடுப்பு நடவடிக்கைக்கு கிருமி நாசினி தெளிப்பான் மற்றும் ஒலி பெருக்கிகள் வழங்கப்பட்டது.திருச்செந்தூா் ஊராட்சி ஒன்றியத்தில் 11 கிராம ஊராட்சிகள் உள்ளது. இந்த கிராம ஊராட்சி பகுதிகளில் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் கரோனா தடுப்பு நடவடிக்கையாக கிராம பகுதியில் சுகாதார பணிகளும், ஆட்டோக்களில் ஒலிப்பெருக்கி மூலம் விழிப்புணா்வு பிரச்சாரங்களும் செய்யப்பட்டு வருகிறது.
மேலும் இப்பணிகளுக்காக கை ஒலிப்பெருக்கிகள் மற்றும் கிருமி நாசினி தெளிப்பான்களை மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (சிறு சேமிப்பு) சசிரேகா ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வைத்து ஊராட்சி செயலா்களிடம் வழங்கினாா். நிகழ்ச்சியின் போது, ஆணையாளா் சந்தோசம், வட்டார வளா்ச்சி அலுவலா் ராமராஜ் மற்றும் அலுவலக பணியாளா்கள் உள்ளிட்டோ் உடனிருந்தனா்.