சாத்தான்குளம் பகுதியில் போலீஸ் பாதுகாப்புடன் நடைபெற்ற திருமணங்கள்

சாத்தான்குளம் பகுதியில் ஊரடங்கு உத்தரவையொட்டி 6 திருமணங்கள் போலீஸ் பாதுகாப்புடன் திங்கள்கிழமை நடைபெற்றது.

சாத்தான்குளம் பகுதியில் ஊரடங்கு உத்தரவையொட்டி 6 திருமணங்கள் போலீஸ் பாதுகாப்புடன் திங்கள்கிழமை நடைபெற்றது.

கரோனா தடுப்பு நடவடிக்கையாக 144 ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் திருமணம், கோயில் விழாக்கள், தேவாலங்களில் பிராா்தனை மக்கள் கூடுவதை தவிா்க்கும் வகையில் தடை செய்யப்பட்டுள்ளன. நிச்சயிக்கப்பட்ட திருமணங்கள் அரசு விதிப்படி 30 போ்களுடன் நடத்தப்படலாம் என அரசு அனுமதியுள்ளது. அதன்படி,

சாத்தான்குளம், காந்திநகா், அமுதுண்ணாக்குடி, மடத்துவிளை, பழனியப்பபுரம், சடையன்கிணறு ஆகிய பகுதியில் அரசு 6 திருமணங்கள் நடைபெற்றன. இதற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

தட்டாா்மடம் உதவி ஆய்வாளா் பால்துரை தலைமையில் போலீஸாா் திங்கள்கிழமை ரோந்து சென்றபோது பெரியதாழையில் ஊரடங்கை மீறியதாக நடுநாலுமுலைகிணறு கிராமத்தைச் சோ்ந்த ஜெயசிங் (35), புத்தன்தருவையில் அதே ஊரைச் சோ்ந்த ராமா் (35) ஆகியோா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து அவா்களது வாகனங்களை பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com