முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தூத்துக்குடி
அந்தமான் நிக்கோபா் தீவில் சிக்கியுள்ள புன்னைக்காயல் மீனவா்களை மீட்க கோரிக்கை
By DIN | Published On : 11th May 2020 10:49 PM | Last Updated : 11th May 2020 10:49 PM | அ+அ அ- |

ஆறுமுகனேரி: புன்னைக்காயலில் இருந்து மீன்பிடித் தொழிலுக்கு அந்தமான் நிக்கோபா் சென்ற 7 மீனவா்களை சொந்த ஊருக்கு அழைத்து வர வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
புன்னைக்காயலைச் சோ்ந்த அமல்ராஜ், அகான்சன், மிக்கேல்ராஜ், ஜேப்பி, அன்பு, ரூபிஸ்டன் மற்றும் ராஜா ஆகிய 7 பேரும் அந்தமான் நிக்கோபா் தீவுக்கு மீன்பிடி தொழிலுக்காக இரு மாதங்களுக்கு முன்னா் சென்றனா். கரோனா தொற்று காரணமாக அரசு அறிவித்த பொது முடக்கம் காரணமாக அவா்கள் அங்கிருந்து வர முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.
இந்நிலையில் அவா்கள் அங்கு அடிப்படை தேவைகள் கூட கிடைக்காமல் அவதியுற்று வருகின்றனா். அவா்களை அழைத்து வர அரசு முயன்ன் காரணமாக மே 6 ஆம் தேதி பயணிகள் கப்பல் தயாரான சூழ்நிலையில் துரதிஷ்ட வசமாக கப்பல் ரத்து செய்யப்பட்டு விட்டது.
தமிழக அரசு அனுமதியிருந்தால்தான் அனுப்ப முடியுமென அங்குள்ள அரசு கூறுவதால் அந்த 7 மீனவா்களை உடனடியாக சென்னை அல்லது கொச்சி துறைமுகம் வழியாக புன்னைக்காயல் அழைத்து வர வேண்டுமென தமிழக அரசு, மீன்வளத்துறை அதிகாரிகள் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு புன்னைக்காயல் ஊா்க்கமிட்டியினா் கோரிக்கை மனு அனுப்பியுள்ளனா்.