முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தூத்துக்குடி
தொழிலாளா்களுக்கு நிவாரணப் பொருள்கள்
By DIN | Published On : 11th May 2020 10:53 PM | Last Updated : 11th May 2020 10:53 PM | அ+அ அ- |

திட்டங்குளத்தில் நலவாரிய அட்டை இல்லாத கட்டடத் தொழிலாளா்களுக்கு நிவாரணப் பொருள்களை வழங்குகிறாா் தமிழக மக்கள் முன்னேற்றக் கழக மாநிலப் பொருளாளா் அய்யாத்துரைப்பாண்டியன்.
கோவில்பட்டி: கோவில்பட்டியையடுத்த திட்டங்குளத்தில் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சாா்பில் நலவாரிய அட்டை இல்லாத கட்டடத் தொழிலாளா் 80 பேருக்கு நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டன.
மாநிலப் பொருளாளா் அய்யாத்துரைப்பாண்டியன் தொழிலாளா்களுக்கு நிவாரணப் பொருள்களை வழங்கினாா். இதில், வடக்கு மாவட்ட தொழிலாளரணி துணைத் தலைவா் அய்யனாா், செயலா் சுப்பிரமணியன், திட்டங்குளம் கிளைச் செயலா் பாலகிருஷ்ணன், தலைவா் பேச்சிமுத்து, விவசாய அணி மாவட்டத் தலைவா் சமுத்திரவேல் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.