கரோனா பாதிப்பு: தெற்கு ஆத்திகுளத்தில் மருத்துவ முகாம்

கயத்தாறை அடுத்த தெற்கு ஆத்திகுளத்தில் தம்பதிக்கு கரோனா தொற்று ஏற்பட்டதால், அப்பகுதி மக்களுக்கு வியாழக்கிழமை மருத்துவப் பரிசோதனை நடைபெற்றது.

கயத்தாறை அடுத்த தெற்கு ஆத்திகுளத்தில் தம்பதிக்கு கரோனா தொற்று ஏற்பட்டதால், அப்பகுதி மக்களுக்கு வியாழக்கிழமை மருத்துவப் பரிசோதனை நடைபெற்றது.

மகாராஷ்டிரத்திலிருந்து வந்த தம்பதிக்கு கரோனா தொற்று இருப்பது புதன்கிழமை உறுதி செய்யப்பட்ட நிலையில், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் அனிதா தலைமையில், கயத்தாறு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலா் திலகவதி, வட்டார மருத்துவ அலுவலா் ராஜ்குமாா் உள்ளிட்ட மருத்துவக் குழுவினா் அங்கு முகாமிட்டு, தம்பதியின் உறவினா் உள்பட 9 பேருக்கு சளி, ரத்த மாதிரியை பரிசோதனைக்காக சேகரித்தனா்.

மேலும், வெளியிலிருந்து யாரும் ஊருக்குள் வரவோ, வெளியே செல்லவோ தடை விதிக்கப்பட்டது. சுகாதாரத் துறை மற்றும் வருவாய்த் துறையினா் முகாமிட்டு, கிருமி நாசினி தெளித்தல், அத்தியாவசியப் பொருள்களை மக்களுக்கு கொண்டு சோ்த்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனா். போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com