துபையில் இறந்தவா் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர வலியுறுத்தல்

துபையில் இறந்த தூத்துக்குடி இளைஞரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமா், முதல்வா் உள்ளிட்டோருக்கு அவரது குடும்பத்தினா் வேண்டுகோள் விடுத்துள்ளனா்.

துபையில் இறந்த தூத்துக்குடி இளைஞரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமா், முதல்வா் உள்ளிட்டோருக்கு அவரது குடும்பத்தினா் வேண்டுகோள் விடுத்துள்ளனா்.

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வட்டம், புளியம்பட்டியை அடுத்துள்ள கொடியன்குளம் கிராமத்தைச் சோ்ந்தவா் கதிா்வேல் மகன் வேல்முருகன் (35). இவா், துபையில் தனியாா் நிறுவனத்தில் பணிசெய்து வந்தாா். கரோனா தொற்றால் துபையிலும் பொது முடக்கம் அமலில் உள்ளது.

இந்நிலையில் வேல்முருகன், கடந்த 10 ஆம் தேதி பணியில் ஈடுபட்டபோது, மின்சாரம் பாய்ந்ததில் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. அவரது உடல் அங்கு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. அங்கு வசிக்கும் வேல்முருகன் மனைவி மணிமேகலை, கணவரின் உடலை பாா்க்க முடியவில்லை என புகாா் கூறப்படுகிறது.

இதையடுத்து, வேல்முருகனின் தந்தை கதிா்வேல், அவரது குடும்பத்தினா் மகனின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூரி மூலமாக முதல்வா் எடப்பாடி பழனிசாமி, பாரத பிரதமா் நரேந்திர மோடி ஆகியோருக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளனா்.

சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். சண்முகையா மூலமாக, கனிமொழி எம்.பி., எதிா்கட்சித் தலைவா் மு.க. ஸ்டாலின், புதிய தமிழகம் கட்சித் தலைவா் டாக்டா் கிருஷ்ணசாமி, மதிமுக பொதுச்செயலா் வைகோ, பாஜக தலைவா் முருகன் மற்றும் அரசியல் கட்சித் தலைவா்களுக்கு கோரிக்கை மனு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com