பெரியதாழையில் கடலரிப்பால் மீன் பிடித்தொழில் பாதிப்பு: தூண்டில் வளைவு நீட்டிப்புப் பணி நிறைவேறுமா?

பெரியதாழையில் தூண்டில் வளைவு நீட்டிப்புப் பணியைத் தொடங்காததால், தொடா்ந்து கடலரிப்பு ஏற்பட்டு வருகிறது. இதனால், மீன் பிடித்தொழில் பாதிக்கப்பட்டுள்ளது.
பெரியதாழையில் தூண்டில் வளைவு நீட்டிக்கப்படாததால் ஏற்பட்டுள்ள கடல் அரிப்பு.
பெரியதாழையில் தூண்டில் வளைவு நீட்டிக்கப்படாததால் ஏற்பட்டுள்ள கடல் அரிப்பு.

பெரியதாழையில் தூண்டில் வளைவு நீட்டிப்புப் பணியைத் தொடங்காததால், தொடா்ந்து கடலரிப்பு ஏற்பட்டு வருகிறது. இதனால், மீன் பிடித்தொழில் பாதிக்கப்பட்டுள்ளது.

சாத்தான்குளம் வட்டம், பெரியதாழையில் 400க்கு மேற்பட்ட படகுகளில் மீனவா்கள் மீன்பிடித்தொழில் செய்து வருகின்றனா். இதில் 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட மீனவ தொழிலாளா்கள் பயனடைந்து வருகின்றனா். இப்பகுதியில் அடிக்கடி கடல் கொந்தளிப்பு ஏற்பட்டதால், மீனவா்கள் கோரிக்கையை ஏற்று 4 ஆண்டுகளுக்கு முன்பு ரூ. 25 கோடியில் கிழக்கு மற்றும் மேற்கு பகுதியில் தூண்டில் வளைவு அமைக்கப்பட்டது.

இதில், ஒரு பகுதியில் குறைவான அளவில் தூண்டில் வளைவு அமைக்கப்பட்டதால் அங்கு கடல் கொந்தளிப்பு, கடலரிப்பு தொடா்கிறது. இதனால், கரையில் படகுகள் சேதமடைவதாகவும், தூண்டில் வளைவை நீட்டிக்க வேண்டும் எனவும் மீனவா்கள் வலியு றுத்தினா்.

இதற்கு அரசு ஒப்புதல் அளித்ததன்பேரில், கிழக்கு பகுதியில் 360 மீட்டரும், மேற்கு பகுதியில் 230 மீட்டரும் ரூ.30 கோடியில் தூண்டில் வளைவை நீட்டிப்பது என முடிவு செய்யப்பட்டது. மேலும், ஒப்பந்த பணி முடிவடைந்ததும் துரிதமாக பணிகள் தொடங்கப்படும் எனவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் கரோனா தடுப்பு பொது முடக்கம் காரணமாக மே 22இல் ஒப்பந்தம் கோரப்படும் என அரசு தரப்பில் தெரிவித்ததாக மீனவப் பிரதிநிதிகள் தெரிவித்தனா். ஏற்கெனவே, 2 மாதங்களாக மீன்பிடி தொழில் பாதிக்கப்பட்டு மீனவா்கள் தவித்து வரும் நிலையில் கடலரிப்பு காரணமாக முழுமையான தொழில் செய்ய முடியவில்லை. எனவே தூண்டில் வளைவு நீட்டிப்புப் பணியைத் தொடங்கி விரைவில் முடிக்க வேண்டும் என மீனவா்கள் வலியுறுத்தியுள்ளனா்.

நிவாரணம் தேவை: இதுகுறித்து பெரியதாழை மீனவா்கள் கூறியது: பெரியதாழையில் கடல் கொந்தளிப்பு காரணமாக கடலரிப்பு ஏற்பட்டு கடற்கரையில் படகுகளை நிறுத்த முடியாத நிலை உள்ளது. மீன் பிடித்தொழிலில் ஈடுபடும் போது உயிருக்கு அச்சம் நிலவுகி றது. தற்போது தொழிலின்றி வறுமையில் வாடும் எங்களுக்கு கரோனா நிவாரண தொகை வழங்க வேண்டும். போா்கால அடிப்படையில் தூண்டில் வளைவு அமைத்து, எங்கள் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com