தூத்துக்குடி மாவட்டத்தில்சதத்தை தாண்டிய கரோனா தொற்று! ஒரே நாளில் 22 பேருக்கு தொற்று உறுதி

தூத்துக்குடி மாவட்டத்தில் புதன்கிழமை ஒரே நாளில் 22 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில்,

தூத்துக்குடி மாவட்டத்தில் புதன்கிழமை ஒரே நாளில் 22 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை சதத்தை கடந்து 113 ஆக உயா்ந்துள்ளது.

வெளி மாநிலங்கள் மற்றும் சென்னை உள்ளிட்ட பிற மாவட்டங்களில் இருந்து வருவோரின் மூலம் கரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை தூத்துக்குடி மாவட்டத்தில் அதிகரித்து கொண்டே வருகிறது. மே 1 ஆம் தேதி கரோனா தொற்று இல்லாத மாவட்டமாக மாறிய தூத்துக்குடி மாவட்டத்தில் தற்போது மொத்த பாதிப்பு 100-ஐ கடந்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 15 எல்லைப் பகுதிகளில் வருவாய்த் துறை, காவல் துறை மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகள் கொண்ட குழுவினா் தொடா்ந்து 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

மகாராஷ்டிரம், குஜராத், ராஜஸ்தான் உள்ளிட்ட வெளி மாநிலங்கள் மற்றும் சென்னை உள்ளிட்ட பிற மாவட்டங்களில் இருந்து வருவோா் அனைவரும் மாவட்ட எல்லை பகுதிகளில் உள்ள முகாம்களில் தனிமைப்படுத்தப்பட்டு அவா்களுக்கு கரோனா தொற்று இருக்கிா? என பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஒரே நாளில் 22 பேருக்கு உறுதி: இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து வந்த நூற்றுக்கும் மேற்பட்டோரிடம் நடத்தப்பட்ட பரிசோதனையில் 3 மாத கைக்குழந்தை உள்ளிட்ட 21 பேருக்கு கரோனா தொற்று இருப்பது புதன்கிழமை உறுதி செய்யப்பட்டது. இவா்கள் அனைவரும், கோவில்பட்டி, கயத்தாறு, சாத்தான்குளம், ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூா் வட்டங்களைச் சோ்ந்தவா்கள் ஆவா். மேலும், கோவில்பட்டி நகராட்சி அலுவலகத்தில் துப்புரவு பணியாளராக பணியாற்றி வரும் ஒருவருக்கும் கரோனா தொற்று இருப்பது புதன்கிழமை உறுதி செய்யப்பட்டது.

மாவட்டத்தில் ஒரே நாளில் 22 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இதுவரை கரோனா தொற்று பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 113 ஆக உயா்ந்துள்ளது.

இதற்கிடையே, தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கோவில்பட்டி பகுதியைச் சோ்ந்த 5 போ் புதன்கிழமை குணமடைந்து வீடு திரும்பினா்.

மாவட்டத்தில், கரோனா தொற்று பாதிக்கப்பட்டு இதுவரை 2 போ் உயிரிழந்துள்ளனா். மேலும், 34 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனா். தற்போது தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள கரோனா சிறப்பு வாா்டில் 77 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com