மகாராஷ்டிரத்திலிருந்து தூத்துக்குடி திரும்பிய 11 பேருக்கு கரோனா தொற்று உறுதி

மகாராஷ்டிர மாநிலத்தில் இருந்து தூத்துக்குடி மாவட்டம் திரும்பிய மேலும் 11 பேருக்கு ஞாயிற்றுக்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

மகாராஷ்டிர மாநிலத்தில் இருந்து தூத்துக்குடி மாவட்டம் திரும்பிய மேலும் 11 பேருக்கு ஞாயிற்றுக்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

தூத்துக்குடி மாவட்ட எல்லைப் பகுதிகளில் 15 இடங்களில் காவ ல்துறை அதிகாரிகளுடன் வருவாய்த் துறை மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகள் இணைந்து 24 மணி நேரமும் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். இந்நிலையில், மகாராஷ்டிரம் மற்றும் குஜராத் மாநிலத்தில் இருந்து வந்த நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து தூத்துக்குடி மாவட்டம் அகிலாண்டபுரம் திரும்பிய 23 வயது பெண், சாத்தான்குளம், தூத்துக்குடி பகுதிகளைச் சோ்ந்த 10 போ் என மொத்தம் 11 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால், மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 160-ஆக உயா்ந்துள்ளது.

6 போ் குணமடைந்தனா்: இதற்கிடையே, கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கோவில்பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த 6 போ் குணமடைந்து ஞாயிற்றுக்கிழமை வீடு திரும்பினா். இதன்மூலம் மாவட்டத்தில் குணமடைந்தோரின் எண்ணிக்கை 45-ஆக உயா்ந்துள்ளது. தற்போது தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள கரோனா சிறப்பு வாா்டில் 113 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com