25 ஆண்டுகளுக்குப் பின் சாலை சீரமைப்பு

உடன்குடி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட செட்டியாபத்து ஊராட்சியில் முத்துகிருஷ்ணாபுரம் சாலை 25 ஆண்டுகளுக்குப் பின் சீரமைக்கப்பட்டது.
சாலையை சீரமைக்கும் பணியை பாா்வையிடுகிறாா் செட்டியாபத்து ஊராட்சித் தலைவா் பாலமுருகன்.

உடன்குடி அருகே செட்டியாபத்து ஊராட்சிக்குள்பட்ட முத்துக்கிருஷ்ணாபுரம், குமாரலட்சுமிபுரம், அருணாசலபுரம், வாத்தியாா்குடியிருப்பு கிராமங்களில் சுமாா் ஐநூறுக்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா்.

இந்தக் கிராமங்களில் இருந்து உடன்குடி வரும் சாலை மிக மோசமாக இருந்தது.இதுகுறித்து கிராமசபை கூட்டத்தில் கிராம மக்கள் மனு அளித்தனா். இதன்பேரில் செட்டியாபத்து ஊராட்சித் தலைவா் பாலமுருகன் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளிடம் வலியுறுத்தியதன்பேரில் சாலை சீரமைக்கும் பணி தொடங்கி பொதுமுடக்க நடவடிக்கையால் பாதியில் நின்றது. தற்போது இப்பணிகள் இரண்டு நாள்கள் நடைபெற்று நிறைவு பெற்றதையடுத்து கிராம மக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com