தூத்துக்குடியில் கரோனா வார்டில் இருந்து தப்பி ஓடிய நபரால் பரபரப்பு

தூத்துக்குடியில் கரோனா வார்டில் இருந்து தப்பி ஓடிய நபரால் பரபரப்பு ஏற்பட்டது. 
தூத்துக்குடியில் கரோனா வார்டில் இருந்து தப்பி ஓடிய நபரால் பரபரப்பு

தூத்துக்குடியில் கரோனா வார்டில் இருந்து தப்பி ஓடிய நபரால் பரபரப்பு ஏற்பட்டது. 

கரொனா வைரஸ் பாதிப்புக்கு தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சுமார் 108-பேர் இன்றைய நிலவரப்படி சிகிச்சை பெற்று வந்தனர். இதில் 19-பேர் முழுமையாக குணமடைந்து இன்று அவர்களது வீட்டிற்கு மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் ஆகியோர் தலைமையில் பழங்கள் வழங்கப்பட்டு வழி அனுப்பி வைக்கப்பட்டது. 

அப்போது குணமடைந்தவர்களை வீட்டிற்கு அழைத்து செல்ல ஆம்புலன்ஸ் மூலம் ஏற்றிக்கொண்டு இருக்கும் போது கரோனா சிகிச்சை வார்டில் சிகிச்சை பெற்று வந்த தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பகுதியை சேர்ந்த ஒருவர் கண் இமைக்கும் நேரத்தில் தப்பி ஓடினார்.

அவரை சுகாதார பணியாளர்கள் மற்றும் அரசு மருத்துவமனை காவலர்கள் விரட்டி பிடித்து மீண்டும் கரொனா சிகிச்சை பிரிவில் கொண்டு ஒப்படைத்தனர். கண் இமைக்கும் நொடியில் நடந்த இந்த சம்பவத்தினால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com