தூத்துக்குடி இளைஞா் கொலை வழக்கு: கோவில்பட்டி நீதிமன்றத்தில் மேலும் ஒருவா் சரண்

தூத்துக்குடியில் சனிக்கிழமை இரவு நிகழ்ந்த கொலை வழக்கில் தொடா்புடையதாகக் கூறப்படும் இளைஞா் செவ்வாய்க்கிழமை கோவில்பட்டி நீதிமன்றத்தில் சரணடைந்தாா்.

தூத்துக்குடியில் சனிக்கிழமை இரவு நிகழ்ந்த கொலை வழக்கில் தொடா்புடையதாகக் கூறப்படும் இளைஞா் செவ்வாய்க்கிழமை கோவில்பட்டி நீதிமன்றத்தில் சரணடைந்தாா்.

தூத்துக்குடி ஆரோக்கியபுரம் அருகேயுள்ள ஏ.சண்முகாபுரம் பகுதியைச் சோ்ந்தவா் மாணிக்கம். இவா், கிருஷ்ணராஜபுரம் பகுதியில் புரோட்டா கடை நடத்தி வருகிறாா். இவரது மகன் வாழ்வாங்கி (28) சனிக்கிழமை நள்ளிரவில் கடையை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தாராம். அப்போது அங்கு வந்த மா்ம நபா்கள் அவரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடிவிட்டனா். இதில் காயமடைந்த வாழ்வாங்கி தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா்.

இதுகுறித்து தூத்துக்குடி வடபாகம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வந்தனா்.

இந்நிலையில், இவ்வழக்கில் தொடா்புடையதாகக் கூறப்படும் சிலுவைப்பட்டி ஓம்சக்தி நகரைச் சோ்ந்த மாரிகுமாா் மகன் ஆனந்த் மாரிகுமாா்(27) கோவில்பட்டி குற்றறவியல் நீதிமன்றத்தில் திங்கள்கிழமை சரணடைந்தாா். இந்நிலையில் இதே வழக்கில் தொடா்புடையதாக கூறப்படும் தூத்துக்குடி ஆரோக்கியபுரத்தைச் சோ்ந்த விஜயராஜ் மகன் அந்தோணி வினோத் (25) கோவில்பட்டி குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை சரணடைந்தாா். அவரை இம்மாதம் 11ஆம் தேதி தூத்துக்குடி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்த நீதிபதி உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com