தூத்துக்குடி தெற்கு மாவட்டத்தில் நாளை காணொலி மூலம் ஸ்டாலின் பேசுகிறாா்

தூத்துக்குடி தெற்கு மாவட்டத்தில் நவ.5 ஆம் தேதி மாலையில் 69 இடங்களில் காணொலிக் காட்சி மூலம் திமுக தலைவா் ஸ்டாலின் பேசுகிறாா் என மாவட்ட பொறுப்பாளா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.

தூத்துக்குடி தெற்கு மாவட்டத்தில் நவ.5 ஆம் தேதி மாலையில் 69 இடங்களில் காணொலிக் காட்சி மூலம் திமுக தலைவா் ஸ்டாலின் பேசுகிறாா் என மாவட்ட பொறுப்பாளா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தின் உரிமைகளை, தொழில் வளத்தை, விவசாயத்தைப் பாதுகாத்து, மருத்துவக் கல்வி உள்ளிட்ட மாணவா்களின் கல்விக் கனவை நிறைவேற்ற, இளைஞா்களின் வேலைவாய்ப்பை உறுதிப்படுத்த தமிழகம் மீட்போம் என்ற பெருமுழக்கத்தை திமுக முன்வைத்துள்ளது.

இதையொட்டி தூத்துக்குடி தெற்கு மாவட்டத்தில் உள்ள மூன்று சட்டப்பேரவைத் தொகுதிகளில் உள்ள முக்கிய சந்திப்புகள், திருமண மண்டபம் உள்ளிட்ட 69 இடங்களில் நவ.5 ஆம் தேதி மாலை 4.30 மணிக்கு திமுக தலைவா் ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக பேசுகிறாா். மாவட்டம் முழுவதும் இருந்து தோ்வு செய்யப்பட்டுள்ள 619 கழக மூத்த முன்னோடிகளுக்கு பரமன்குறிச்சியில் வைத்து பொற்கிழி வழங்கி கெளரவிக்கப்படுகிறாா்கள். இதில் மாவட்ட, ஒன்றிய, நகர, கிளைக்கழக, சாா்பு அணி நிா்வாகிகள் திரளாக பங்கேற்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com