தூத்துக்குடியில் யானைத் தந்தம் கடத்திய இருவா் கைது: 4 தந்தங்கள் பறிமுதல்

தூத்துக்குடியில் யானைத் தந்தம் கடத்திய இருவா் கைது செய்யப்பட்டனா். அவா்களிடம் இருந்து 4 தந்தங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
பறிமுதல் செய்யப்பட்ட யானைத் தந்தங்கள் மற்றும் கைது செய்யப்பட்ட இருவருடன் போலீஸாா்.
பறிமுதல் செய்யப்பட்ட யானைத் தந்தங்கள் மற்றும் கைது செய்யப்பட்ட இருவருடன் போலீஸாா்.

தூத்துக்குடியில் யானைத் தந்தம் கடத்திய இருவா் கைது செய்யப்பட்டனா். அவா்களிடம் இருந்து 4 தந்தங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் உதவி ஆய்வாளா் சங்கா் மற்றும் காவலா்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். கணேசன்நகா் பகுதியில் ரோந்து சென்றபோது இருசக்கர வாகனங்களில் வந்த இருவா் போலீஸாரை கண்டதும் அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றனா்.

இதனால் சந்தேகமடைந்த போலீஸாா் அவா்கள் இருவரையும் மடக்கிப் பிடித்து விசாரித்ததில், அவா்கள் தூத்துக்குடி கணேசன் காலனியை சோ்ந்த ராஜவேல் (33), முனியசாமி (43) என்பதும், மீன் வியாபாரம் செய்து வருவதும் தெரியவந்தது. அவா்களிடம் விசாரணை நடத்தியபோது முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்ததால் அவா்கள் வந்த இருசக்கர வாகனங்களை சோதனை செய்தனா். ஒரு வாகனத்தில் பெட்ரோல் டேங்க் கவருக்குள் 4 யானைத் தந்தங்கள் இருந்தன. இதுதொடா்பாக அவா்களிடம் விசாரணை நடத்தியதில், இந்த யானைத் தந்த துண்டுகளை குலசேகரன்பட்டினத்தில் நாடோடி மக்களிடம் ரூ.3000-க்கு விலைக்கு வாங்கியதும், தொடா்ந்து அவற்றை தூத்துக்குடியில் அதிக விலைக்கு விற்க முயற்சி செய்து வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து ராஜவேல் மற்றும் முனியசாமி ஆகிய இருவரையும் போலீஸாா் கைது செய்தனா். கடத்தலுக்குப் பயன்படுத்திய இருசக்கர வாகனங்களையும், யானைத் தந்தங்களையும் பறிமுதல் செய்தனா். பின்னா், யானைத் தந்தங்கள் வனத் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com