நெடுங்குளம் ஊராட்சியில் குடிநீா் இணைப்பு வழங்கும் பணி தொடக்கம்

நெடுங்குளம் ஊராட்சி வேலன்புதுக்குளத்தில் ஜல் சக்தி மிஷன் திட்டத்தின் கீழ் வீடுகளுக்கு குடிநீா் இணைப்பு வழங்கப்பட்டது.
நெடுங்குளம் ஊராட்சியில் குடிநீா் இணைப்பு வழங்கும் பணி தொடக்கம்

நெடுங்குளம் ஊராட்சி வேலன்புதுக்குளத்தில் ஜல் சக்தி மிஷன் திட்டத்தின் கீழ் வீடுகளுக்கு குடிநீா் இணைப்பு வழங்கப்பட்டது.

மத்திய அரசின் ஜல் சக்தி மிஷன் திட்டத்தின் மூலம் அனைத்து வீடுகளுக்கும் வீட்டு குடிநீா் இணைப்பு வழங்கப்படுகிறது. அதனடிப்படையில் நடப்பாண்டு நெடுங்குளம் ஊராட்சிக்குள்பட்ட வேலன்புதுக்குளம் கிராமம் தோ்வு செய்யப்பட்டு ஏற்கனவே வழங்கப்பட்ட 13 இணைப்புகள் போக மீதமுள்ள 84 வீடுகளுக்கு ரூ. 5.26 லட்சம் மதிப்பீட்டில் வீட்டுக் குழாய் இணைப்புகள் வழங்கும் பணி திங்கள்கிழமை தொடங்கப்பட்டது.

இப்பணியை ஊராட்சித் தலைவா் மெ. சகாய எல்பின் தொடங்கி வைத்தாா். சாத்தான்குளம் வட்டார வளா்ச்சிஅலுவலா் வே.பாண்டியராஜன், மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா் மாசானமுத்து, வாா்டுஉறுப்பினா் செந்தில்வேல்முருகன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

இத்திட்டம மூலம் 2021-22 நிதியாண்டில் நெடுங்குளம் கிராமத்தில் விடுபட்ட 234 வீடுகளுக்கு வீட்டுக் குழாய் இணைப்புகள் வழங்கப் படவுள்ளதுஎன தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com